|
'அன்றோ'
அசைநிலை. பூவனம் - 'புவனம்' என்பதன் நீட்டல் விகாரம்.
|
30
|
துணைதீர்ந்த
கன்னியெனை யீன்றாலு முறுந்துயரிற் றுணையா
தற்கு
மிணைதீர்ந்த விப்பயன்பேய்க் கொளிப்பதற்கு மவட்கிகழ்வாங்
கெய்தா தற்கும்
வணைதீர்ந்த துணையளிப்பே னிவைகூறா மணத்தூதாய்
வான்விட் டங்கண்
ணணைதீர்ந்த வருட்கன்னி யாமெனவே கென்றிறையோ
னனுப்பு கின்றான். |
| |
"துணை தீர்ந்த
கன்னி எனை ஈன்றாலும், உறும் துயரில் துணை
ஆதற்கும்
இணை தீர்ந்த இப் பயன் பேய்க்கு ஒளிப்பதற்கும், அவட்கு
இகழ்வு ஆங்கு எய்தா தற்கும்,
வணை தீர்ந்த துணை அளிப்பேன்; இவை கூறா, மணத்துதூதாய்
வான்விட்டு அங்கண்
அணை தீர்ந்த அருட் கன்னி, 'ஆம்' என ஏகு." என்று
இறையோன் அனுப்புகின்றான். |
"ஆண் துணை
வேண்டாத கன்னியாகவே அவள் என்னைப்
பெறுவாளாயினும், தனக்கு நேரும் துன்பங்களில் துணை ஆகும் பொருட்டும்,
ஒப்பற்ற இவ்வவதாரப் பயனைப் பேய்க்கு மறைக்கும் பொருட்டும்,
அவளுக்கு அதனால் இழிவு ஏற்படாது தடுக்கும்பொருட்டும் குறையற்ற ஒரு
துணைவனை அவளுக்குக் கொடுப்பேன்; நீ இவற்றையெல்லாம் அவளுக்குக்
கூறாமல், கரையில்லாத தெய்வ அருள் கொண்ட அக்கன்னி, 'ஆகட்டும்'
என்று இசையு மாறு மணத்தூதாய் வானத்தை விட்டு அங்கே செல்லுவாய்."
என்று கூறி ஆண்டவன் அவ்வானவனை அனுப்புகின்றான்.
அவதாரச்
செய்தி பேய்களுக்கு மறைக்கப்பட்டிருந்தமை பின் குணுங்கு
மந்திரப் படலத்தாற் புலனாகும். இழிவு - கணவனின்றி மகப் பெற்றாளென்ற
இழிவு. யூத குலத்தில் இது கல்லாலெறிந்து கொல்லப்பட வேண்டிய
குற்றமாகும். (உபாகமம் : 22 : 23 - 27) |