|
31
|
வான்செய்த
சுடரேய்க்கும் வடிவொடுவா னவன்சடுதி
வந்தக் கன்னி
கான் செய்த மலர்ப்பதத்தைக் கண்டிறைஞ்சிக் கடவுளருட்
கருதுந் தன்மை
தான்செய்த வேவலெனத் தவறாதோர் மணத்தமைதல தரும
மென்னத்
தேன்செய்த கனிசொல்லாற் சீர்த்தபல வுறுதிகளுஞ் செப்பி
னானே |
| |
வான்
செய்த சுடர் ஏய்க்கும் வடிவொடு வானவன் சடுதி வந்து, அக் கன்னி
கான் செய்த மலர்ப் பதத்தைக் கண்டு இறைஞ்சி, "கடவுள் இருள்
கருதும்
தன்மை
தான் செய்த ஏவல் என, தவறாது ஓர் மணத்து அமைதல் தருமம்."
என்ன,
தேன் செய்த கனி செல்லால் சீர்த்த பல உறுதிகளும் செப்பினானே. |
அவ்வானவன்
வானத்தில் ஒளி செய்த ஞாயிறே போலும் வடிவோடு
விரைவில் வந்து, மணம் பரப்பிய தாமரை மலர் போன்ற அக்கன்னியின்
திருஅடி கண்டு வணங்கி, "கடவுள் தாமே அருள் செய்யக் கருதிய
தன்மையாய் இட்ட கட்டளையென்று மதித்து, தவறாமல் ஒரு திருமணத்திற்கு
இசைதல் கடமை," என்று முதலிற் கூறி, தேனுக்கு ஒப்பான கனித்த
சொற்களால் மேலும் சிறந்த பல உறுதிகளையும் எடுத்துக் கூறினான்.
|
32
|
மணமொழிமுற்
றுணராமுன் மனமுளைந்து வாடுகின்ற வதன
மாறப்
பணிமொழிமுற் றுணராதாய்ப் பகல்செய்கண் ணாறெனநீர்
பயின்று சேப்ப
வணிமொழிமுற் றுணர்நெஞ்ச முட்டுடிப்ப நெட்டுயிர்ப்போ
டரற்றிப் பின்னர்
துணிமொழியுற் றிறைவனது துணைத்தாளைப் பணிந்திவளுஞ்
சொல்ல லோர்ந்தாள்
|
|