மண மொழி முற்று
உணரா முன் மனம் உளைந்து, வாடுகின்ற
வதனம் மாற,
பணி மொழி முற்று உணராதாய் பகல் செய் கண் ஆறு என நீர்
பயின்று சேப்ப,
அணி மொழி முற்று உணர் நெஞ்சம் உள் துடிப்ப நெட்டுயிர்ப்போடு
அரற்றி, பின்னர்
துணி மொழி உற்று, இறைவனது துணைத் தாளைப் பணிந்து
இவளும் சொல்லல் ஓர்ந்தாள். |
திருமணம் என்ற
பேச்சின் பொருளை முற்றும் உணரு முன்னரே
மனம் நொந்து, வாடுகின்ற முகம் நிறம் மாறியது. பதிலாகச் சொல்ல
வேண்டிய மொழியை முற்றும் உணராமல், ஒளியைப் பரப்பும் கண்கள் ஆறு
போல நீரைப் பெருக்கிச் சிவந்தன. அழகாகச் சொல்லிய வானவன்
மொழியின் பொருளை முற்றும் உணர்ந்த நெஞ்சம் உள்ளே படபட வென்று
துடித்தது: அவள் பெருமூச்சோடு அழுதாள்; பின்னர், துணிந்து சொல்ல
வேண்டிய மொழியைக் கண்டு கொண்டாள்; அவ்வானவனோடு பேசாமல்,
ஆண்டவனின் இரு அடிகளையும் பணிந்து தொழுது, மறுமொழி சொல்ல
நினைத்தாள்.
|
33
|
தேன்றானோ
நஞ்சதுவோ வெனவிழுங்க லோடுமிழ்தல்
தேற்றா நெஞ்சாள்
மீன்றானோர் முடிச்சென்னி நிலம்புல்ல முழந்தாளி விரும்பி
யூன்றி
வான்றானோ ரணியெனவெஃ கியகூந்தல் வலத்தோளின்
வயங்கத் திங்கட்
கூன்றானோ பூவெருத்தங் கோட்டியிரு கைகூப்பிக் கூற
லுற்றாள். |
| |
தேன் தானே
நஞ்சு அதுவோ என விழுங்கலோடு உமிழ்தல்
தேற்றா நெஞ்சாள்,
மீன் தான் ஓர் முடிச் சென்னி நிலம் புல்ல, முழந்தாளை விரும்பி
ஊன்றி,
வான் தான் ஓர் அணி என வெஃகிய கூந்தல் வலத் தோளின்
வயங்க, திங்கட்
கூன் தானோ பூ எருத்தம் கோட்டி, இரு கை கூப்பிக் கூறல்
உற்றாள்: |
|