|
அந்த வானவன்
மொழி தேன் தானோ என்று விழுங்குதலையும்,
நஞ்சோ என உமிழ்தலையும் தெளியாத நெஞ்சம் கொண்ட மரியாள்,
விண்மீன்களையே ஒரு முடியாகக் கொண்டு அணிந்திருந்த தன் தலை
நிலத்தோடு படியப் பணிந்தாள்: முழந்தாளை விருப்பத்தோடு ஊன்றினாள்;
கருமேகம் தனக்கு ஓர் அணியென்று விரும்பிய தன் கூந்தல் வலத்தோளில்
விழுந்து புரள, பிறைச்சந்திரன் கூனல் தானோ என்று கொள்ளத் தக்கவாறு
தன் பிடரியை வளைத்து, இரு கைகளையும் நெஞ்சோடு குவித்து,
பின்வருமாறு சொல்லத் தொடங்கினாள்;
|
34
|
உலகெல்லாம்
புரக்குமருட் கொடையோனே யுருவில்லா
தொளிவல் லோனே
யலகில்லாத் தற்பரனே யற்புதனே யென்னன்பே யரசர் கோவே
நலமெல்லாந் தந்துதந்த நல்லுணர்வு மறியாயோ நலமிக் கோயுட்
புலமெல்லா மறிந்தாயேற் புலம்பிமன முடைந்துளையப்
புகல்கிற் பானேன். |
| |
"உலகு எல்லாம்
புரக்கும் அருட் கொடையோனே, உரு இல்லாது
ஒளி வல்லோனே,
அழகு இல்லாத் தற்பரனே, அற்புதனே, என் அன்பே அரசர் கோவே,
நலம் எல்லாம் தந்து, தந்த நல் உணர்வும் அறியாயோ? நலம்
மிக்கோய், உட்
புலம் எல்லாம் அறிந்தாயேல், புலம்கி மனம் உடைந்து உளைய,
புகல்கிற்பான் ஏன்?" |
"உலகங்களையெல்லாம்
காக்கும் அருளுள்ள கொடையாளியே,
உருவமில்லாது ஒளி மயமாய் விளங்கும் வல்லவனே, அளவில்லாது தானாய்
நிலைக்கும் ஆண்டவனே, அரியன செய்வோனே, என் அன்பே,
அரசர்க்கெல்லாம் அரசனே, எனக்கு நலமெல்லாம் தந்து, எல்லாவற்றிற்கும்
மேலாகத் தந்த நல்லுணர்வையும் நீ அறியாயோ? நலம் மிக்கவனே, என்
உள்ளுணர்வு முழுவதும் நீ அறிந்திருந்தாயானால், நான் புலம்பி மனம்
உடைந்து வருந்துமாறு, இதனைச் சொல்ல முற்படுவது ஏன்?"
|