பக்கம் எண் :

முதற் காண்டம்20

     முல்லை நிலத்தைக் கடந்தது முன் பாடலில் குறிக்கப்பெற்றது. கடலால்
இங்கு நெய்தல் நிலம் குறிக்கப்படுதலின், நானிலம் இடம் பெற்றது காண்க.
அஞ்சு, எஞ்சு, துஞ்சு என்ற மூன்றும் 'அஞ்சுதல், என்பது போன்று பொருள்
அமையும் முதனிலைத் தொழிற்பெயர்கள். 'அஞ்சிலா' என்றவிடத்து 'இலா'
ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்; பிற இரண்டும் ஈறுகெட்ட எதிர்மறைப்
பெயரெச்சங்கள், 'இவறியது' என்ற வினையாலணையும் பெயரின் ஈறுகெட்டது.
              
                     9
மலையி னேரறல் மலியநாற் றிணையருந் தியபின்
னலையி னேருற லவனிதன் மகர்க்கெலா மூட்டி
முலையி னேருறீஇ விஞ்சுபால் முடுகலி லுடுத்த
கலையி னேருறீஇக் களிப்பொடு சிந்துவ போன்றே.
 
மலையின் நேர் அறல் மலிய நால் திணை அருந்திய பின்,
அலையின் நேர் உறல், அவனி தன் மகர்க்கு எலாம்                                       ஊட்டி,
முலையின் ஏர் உறீஇ விஞ்சு பால் முடுகலில், உடுத்த
கலையின் ஏர் உறீஇக் களிப்பொடு சிந்துவ போன்றே.

     மலையினின்று புறப்படும் வெள்ளம், நான்கு நிலங்களும் மிகுதியாக
அருந்திய பின்னும், கடலுக்குள் மேலும் மேலும் நேராகச் சென்று
கொண்டிருக்கும். இக்காட்சி, நிலமகள் தன் மக்களுக்கெல்லாம் ஊட்டிய
பின்னும் தன் முலையினின்று பொங்கிச் சுரந்து மிஞ்சிய பால் உந்துதலால்,
தான் உடுத்த ஆடையின்மேல் எழுந்து சுரந்து களிப்போடு சிந்துவதைப்
போன்று இருந்தது.

    
மலை நிலமகளின் முலையாகவும் கடல் ஆடையாகவும் நானிலம்
மக்களாகவும் கொள்க. நானிலம் 'மகர்' எனவே, அவனி தாயாகிய
'நிலமகள்' ஆயிற்று.

                 உழவுத் தொழில் வளம்
         
                     10
செறியு லாம்புனல் சிறைசெய்து பயன்பட வொதுக்கி
வெறியு லாமலர் மிடைந்தகல் வயல்வழி விடுவார்
பொறியு லாம்வழி போக்கில் தியல்பட வடக்கி
நெறியு லாவற நேரவை நிறுத்தினர் போன்றே.
 
செறி உலாம் புனல் சிறை செய்து, பயன்பட ஒதுக்கி,
வெறி உலாம் மலர் மிடைந்து அகல் வயல் வழி விடுவார்,
பொறி உலாம் வழி போக்கு இலது, இயல்பட அடக்கி,
நெறி உலாவு அற நேர் அவை நிறுத்தினர் போன்றே.