செறிந்து ஓடும்
வெள்ளத்தைச் சூதேய நாட்டு உழவர் அணை கட்டித்
தடுத்து, பின்னால் பயன்படுமாறு சேர்த்து வைத்து, வாசனை பரக்கும் பூக்கள்
செறிந்து பரந்து கிடக்கும் வயல்களில் வாய்க்கால் வழியே தக்க நேரத்தில்
பாய விடுவர். இச் செயல், ஐம்பொறிகள் அலைக்கும் வழிகளிலே மணம்
செல்ல விடாமல், நல்லியல்போடு பொருந்துமாறு அவற்றை முதலில் அடக்கி,
பின் நன்னெறியோடு பொருந்திய புண்ணியத்தின்கண் நேரே அவற்றை
நிலைபெறச் செய்யும் அறவோர் செயலை ஒத்திருந்தது.
'விடுவார்', 'நிறுத்தினர்' என்பவை ஆகு பெயராய் அவர்தம்
செயல்களை உணர்த்தி நின்றன.
11
|
உவர்க்குந்
தாழ்கட லுடுத்தகல் விரிதலை ஞால
மெவர்க்குந் தாயென வெண்ணிலாக் கிழிபடக் கீறு
மவர்க்குந் தானுண வளித்தலே நோய் செய்வார்க் குதவி
தவர்க்குந் தாவருந் தருமமென் றியற்றுதல் போன்றே. |
|
உவர்க்கும்
தாழ் கடல் உடுத்து அகல் விரி தலை ஞாலம்,
எவர்க்கும் தாய் என எண் இலா கிழிபடக் கீறும்
அவர்க்கும் தான் உணவு அளித்தலே, நோய் செய்வார்க்கு உதவி
தவர்க்கும் தாவ அருந் தருமம் என்று இயற்றுதல் போன்றே |
உப்புச் சுவையுள்ள
ஆழமான கடலை ஆடையாக உடுத்து அகன்று
விரிந்த இடத்தை உடைய இவ்வுலகம், எல்லோருக்கும் தானே தாயாக
இருப்பதனால், தன்னைத் தாய் என்று எண்ணாமல் கிழித்துக் கீறும்
உழவர்க்கும் தானே உணவளித்துப் பேணும். இது, துன்பம் செய்வார்க்கு
உதவி செய்தல் தவ முனிவர்க்கும் எட்டுதற்கு அரிய புண்ணியமென்று
அருள் உள்ளங்கொண்ட சிலர் செய்தலை ஒத்திருந்தது.
கீறுவார்க்கும்
நோய் செய்வார்க்கும் தீங்கு செய்யாது நன்மை செய்தல்
நிலத்தாய்க்கும் அருளுடையோர்க்கும் பொதுத்தன்மை என்க. தாவ + அரும்
- 'தாவவரும்' என்பது 'தாவரும்' எனத் தொகுத்தல் விகாரம் கொண்டது.
12 |
கூர்வி
ளைத்தருட் குருவிதி போன்றொன்று கோடி
நீர்வி ளைத்தநெல் நிரம்பென வித்தின ரிரட்ட
வேர்வி ளைத்தபற் கடைச்சியர் குரவையா டியல்பாற்
றேர்வி ளைத்தவோர் சிறப்பெழும் விழாவணி போன்றே. |
|