பக்கம் எண் :

முதற் காண்டம்201

என்று என்றாள் மென் தாளாள்; இதயத்தில் தீ பாய்ந்து உள் எரி
                                        புண் அன்னாள்,
அன்று என் தாய், மனம் உருகி ஆகுலத்து ஆழ்கடல் மூழ்கி
                                        அழுந்தா நிற்ப,
நின்று அன்று ஆயிரக் கதிரோன் நேர் உருக் காட்டிய வானோன்,
                                        நிகராக் கன்னி
மின் தன் தாள் தொழுது, இன்னும் விரி வேதத்து உறுதி உரை
                                        விளம்புகின்றான்:

     என்று இவ்வாறெல்லாம் மெல்லிய அடியை உடைய மரியாள்
ஆண்டவனை நோக்கிச் சொன்னாள்; அன்று என் தாய், தன் நெஞ்சில்
நெருப்பு பாய்ந்து உள்ளே எரிந்து புண்பட்ட தன்மையாய் மனம் உருகி,
துயரம் என்னும் ஆழமான கடலில் மூழ்கி அழுந்தி நின்றாள். அன்று
ஞாயிறு போன்ற உருவத்தைக் காட்டி வந்த வானவன் சிறிது நின்று,
மின்னல் ஒத்த நிகரற்ற கன்னியின் அடியைத் தொழுது, விரிந்த வேத நூல்
அடிப்படையில் மேலும் சில உறுதிகளை எடுத்துக் கூறத் தொடங்குகின்றான்;

                         37
மீனொடுமின் சுடரெல்லாம் வெல்லறிவுற் றயர்வானேன்
                           வெருவா தொன்றாய்த்
தேனொடுகொல் லரியினமோர் நாவாய்க்குள் ளடக்கினனுந்
                           திளைத்த செந்தீக்
கானொடுதண் மதுமலரிற் குளிரச்செய் தவனுமணக் கடியோ
                           டுன்கண்
வானொடுமண் வணங்குந்தூய் கன்னிமைகாப் பதுமரிதோ
                           மறைபூண் டுள்ளாய்.
 
"மீனொடு மின் சுடர் எல்லாம் வெல் அறிவு உற்று அயர்வான்
                             ஏன்? வெருவாது ஒன்றாய்த்
தேனொடு கொல் அரி இனம் ஓர் நாவாய்க்குள் அடக்கினனும்,
                             திளைத்த செந்தீக்
கானொடு தண் மது மலரின் குளிரச் செய்தவனும், மணக் கடியோடு
                             உன்கண்
வானொடு மண் வணங்கும் தூய் கன்னிமை காப்பதும் அரிதோ,
                             மறை பூண்டு உள்ளாய்?"