| "வேதத்தை
அணிகலனாக அணிந்தவளே, விண்மீனோடு மின்னும் பிற
சுடர்களை யெல்லாம் ஒளியால் வெல்லக் கூடிய அறிவு பெற்றிருந்தும் நீ
கலங்குவது ஏன்? பசுக்களோடு அவற்றைக் கொல்லும் இயல்புள்ள சிங்கக்
கூட்டமும் ஒன்றாய் அஞ்சாதவாறு ஒரே கப்பலுக்குள் அடக்கிக்
கொண்டவனும், மூண்டெரிந்த செந்றிற நெருப்பை வாசனை கொண்ட
குளிர்ந்த தேனுள்ள மலரைப் போலக் குளிரச் செய்தவனுமாகிய ஆண்டவன்,
வானுலகோடு மண்ணுலகமும் வணங்கத் தக்க தூய கன்னிமையைத்
திருமணத்தின் புதுமையோடு உன்பால் வானுலகோடு மண்ணுலகமும்
வணங்கத் தக்க தூய கன்னிமையைக் காப்பதும் அரிய செயலோ"?
ஓர்
நாவாய்க்குள் அடக்கியது: நோவா காலத்து வெள்ளப் பெருக்கின்
போது நிகழ்ந்தது: ஆதியாகமம் 7:11-16 செந்தீக் குளிரச் செய்தது: நபூக்கன்
சூளையில் மூன்று இளைஞரைக் காத்தது: தானியேல், 3-ஆம் அதிகாரம்.
தேன் - தேனு: பசு.
|
38
|
சொல்வழியு
முள்வழியுந் தொடர்ந்தடங்கா தெவ்வுவமைத்
தொகுதி யாவும்
வெல்வழியு மாயவலி வேய்ந்தபரன் றிருவுளமாய் விகற்ப
மென்னோ
வெல்வழியுங் கடந்தறிவா னேவலினா லின்னலுறு தென்ப
வானோன்
நல்வழியுங் கடந்தனதிண் கன்னியறா மணத்திணங்கிங் கடவு
டாழ்ந்தாள். |
| |
"சொல்
வழியும் உள் வழியும் தொடர்ந்து அடங்காது, எவ் உவமைத்
தொகுதி யாவும்
வெல் வழியும் ஆய வலி வேய்ந்த பரன் திருவுளம் ஆய், விகற்பம்
என்னோ?
எல் வழியும் கடந்து அறிவான் ஏவலினால், இன்னல் உறாது"
என்ப வானோன்,
கல் வழியும் கடந்து அனதிண் கன்னி அறா மணத்து இணங்கி,
கடவுள் தாழ்ந்தாள். |
"சொல்லின்
வழியாகவும் உள்ளத்து நினைவின் வழியாகவும் காண
அடங்காதவனாய், எவ்வகையான ஒப்புமைக் கூட்டம் யாவற்றையும் வெல்லும்
தன்மையும் உள்ள வல்லமை பொருந்திய ஆண்டவனின் திருவளம்
இதுவென்று இருக்கையில் தடை என்னவோ? |