|
ஒளியின் தன்மை
யெல்லாம் கடந்து அறியும் இறைவன்
கட்டளையினால், எவ்விதத் துன்பமும் ஏற்படாது" என்று வானவன் சொல்லி
முடிக்கவே, மரியாள் மலையின் தன்மையையும் வென்றது போன்ற உறுதி
வாய்ந்த தன் கன்னிமை கெடாத ஒரு திருமணத்திற்கு இணங்கி, கடவுளைப்
பணிந்தாள்.
சீமையோன்
செய்த திருமண ஏற்பாடு
-மா, விளம்,
-மா, கூவிளம்
|
39
|
ஆமென
வாயின தறைய வானவ
னாமென யாவரு நயப்ப நாயக
னேமென மாண்பிசை சீமை யோனெனுந்
தோமென யாவுந்தீர் தவற்குச் சொற்றுவான். |
| |
ஆம்
என ஆயினது அறைய வானவன்,
நாம் என யாவரும் நயப்ப, நாயகன்,
ஏம் என மாண்பு இசை சீமையோன் எனும்
தோம் என யாவும் தீர் தவற்குச் சொற்றுவான்: |
கன்னி மரியாள்
திருமணத்திற்கு ஆமென்று இசைவு தெரிவித்ததை
வானவன் வந்து சொல்ல, யாவற்றிற்கும் தலைவனாகிய ஆண்டவன்,
மனிதர் யாவரும் நாம் என்று தலைநிமிர்ந்து இன்பங் கொள்ளுமாறு,
மாண்புகளெல்லாம் தமக்குப் புகலிடமெனச் சென்று சேர்ந்துள்ளவனும்
குற்றங்கள் யாவும் அறவே நீங்கியவனுமான சீமையோன் என்னும்
முனிவனுக்குத் தோன்றிப் பின் வருமாறு சொல்லுவான்:
ஏம்-'ஏமம்'
என்ற சொல்லின் இடைக்குறை. சீமையோன்: எருசலேம்
ஆலயத்துத் தலைமைக் குரு.
|
40
|
கோதில
தாவிதன் குலத்திற் றாதைதாய்
மாதில தணர்ந்தமா மரியென் பாளிவ
ணேதில வரத்துயர்ந் திலங்கு மீன்களுள்
மீதியை மதியென விளங்கின் றாளரோ. |
|