|
'யாரையும்'
என்றாரேனும், அவருள் மணமாகாத இளைஞரை மட்டும் கருதியதாகக் கொள்க.
| 46
|
நன்றென நயப்பொடு
நாதன் வேண்டினர்
கன்றின முரசொலி கறங்கத் தாவிதன்
றுன்றின வனைவருந் துன்மி னென்றழைத்
தன்றின மணிநக ரரிது வந்ததே. |
| |
நன்று என நயப்
பொடு நாதன் வேண்டினர்.
கன்றின முரசு ஒலி கறங்க, "தாவிதன்
துன்றின அனைவரும் துன்மின்!" என்று அழைத்து,
அன்று இன மணி நகர் அரிது உவந்ததே. |
அதுவே நல்லதென்று
அனைவரும் இசைந்து விருப்பத்தோடு
ஆண்டவனை வேண்டினர். சீமையோன் ஆணைப்படி அடிக்கப்பட்ட முரசின்
ஒலி முழங்க. "தாவிதன் மரபைச் சேர்ந்த அனைவரும் வந்து கூடுங்கள்!"
என்று அழைக்க, அது கேட்டு, பலவகை மணிகளால் அழகு செய்யப் பட்ட
எருசலேம் நகரம் அன்று சொல்லற்கரிய முறையில் மகிழ்ந்தது.
மரியாள்
வேண்டும் துணைவன்
| 47
|
கார்க்கடை
யுருமென முரசங் காலொலி
யீர்க்கடை கணையென விருசெ விப்புகப்
போர்க்கடை யெனமனம் புலம்பி மாமரி
சீர்க்கடை பிரானடி யிறைஞ்சிச் செப்புவாள். |
| |
கார்க்கடை உரும்
என முரசம் கால் ஒலி,
ஈர்க்கு அடை கணை என இரு செவிப் புக,
போர்க் கடை என மனம் புலம்பி மாமரி,
சீர்க்கு அடை பிரான் அடி இறைஞ்சிச் செப்புவாள்: |
|