|
கருமேகத்தில்
தோன்றும் இடியைப் போல் அம்முரசு கக்கிய ஓசை,
இறகுடன் கூடிய அம்பு போலப் பாய்ந்து தன் இரு செவிகளிலும் புகவே,
மனம் போர்க்களம் ஆகுமாறு மா மரியாள் புலம்பி, சீர்பெறுவதற்குப் புகலாக
அடையத் தக்க ஆண்டவன் திருவடிகளை வணங்கிப் பின்வருமாறு
சொல்லுவாள்:
| 48 |
எள்ளொழிந்
துனதுதா ளிறைஞ்சி நாளெலாந்
தெள்ளொளிர்ந் துயர்ந்தவித் தேவ கோயிலின்
னள்ளொளிந் திறுப்பவென் னசைய றிந்துளா
யுள்ளொளிந் ததுமெலா முணரு நாதனே |
| |
"எள் ஒழிந்து,
உனது தாள் இறைஞ்சி, நாள் எலாம்
தெள் ஒளிர்ந்து உயர்ந்த இத்தேவ கோயிலின்
நள் ஒளிந்து இறுப்ப என் நசை அறிந்து உளாய்,
உள் ஒளிந்ததும் எலாம் உணரும் நாதனே!" |
"உள்ளே மறைந்து
கிடப்பது உட்பட எல்லாம் அறியும் ஆண்டவனே,
இகழத் தக்கவற்றையெல்லாம் விலக்கி, உனது திருவடியையே வணங்கி,
தெளிந்த ஒளி படர்ந்து உயர்ந்து நின்ற இந்தத் தெய்வக் கோவிலின்
நடுவே வாழ்நாளெல்லாம் மறைந்து தங்க வென்று நான் கொண்ட என்
ஆசையையும் நீ அறிந்தேயிருக்கின்றாய்."
| 49 |
தீயினுஞ்
சுடுமணஞ் செய்கென்றாயது
வாயினு மடவரல் மறுக்க லாங்கொலோ
வீயினுங் கொடியதிவ் வினையி னாலுளங்
காயினுந் திருவுளங் களிவென் றாமரோ. |
| |
தீயினும் சுடும்
மணம், செய்க என்றாய் அது
வாயினும் மடவரல் மறுக்கல் ஆம்கொலோ?
வீயினும் கொடியது இவ் வினையினால் உளம்
காயினும், திரு உளம் கனிவு என்று ஆம் அரோ. |
|