பக்கம் எண் :

முதற் காண்டம்212

சொல்லுதற்கரிய ஒரு திருமணத்தில் இவரை இணைத்து வைத்த பயனுள்ள
நிகழ்ச்சியை இனிச் சொல்வோம்.

     'இன்னரு' போன்று அடிதோறும் முதற்கண் வருவனவெல்லாம்
'இன்னவரு' என்பது போன்று வரவேண்டிய தொகுத்தல் விகாரங்கள்.
'அரோ' அசைநிலை.

             மணமகள் மரியாள் மனங்குலைந்து அழுதல்

     - மாங்கனி, கூவிளம், கூவிளங்காய்.
 
             55
குணிலுற்றொலி யுற்றகல் கோமுரசின்
பணியுற்றும ணப்பய னாகநசைத்
துணிவுற்றர சாயின சுற்றமுளா
ரணியுற்றெவ ருங்கடி தண்டினரால்
 
குணில் உற்று ஒலி உற்று அகல் கோமுரசின்
பணி உற்று,மணப் பயன் ஆக நசைத்
துணிவு உற்று, அரசு ஆயினசுற்றம் உளார்
அணி உற்று எவரும் கடிது அண்டினர் ஆல்.

     குருந்தடியால் அடிக்கப்பட்டு ஒலி பெற்று நகரில் பரவிய அரச
முரசின் கட்டளையை ஏற்று, திருமணம் என்னும் பயன் தத்தமக்கே
வாய்க்க வேண்டுமென்ற ஆசையால் துணிவு கொண்டு, தாவிதன் அரச
மரபால் அமைந்த உறவு முறையாய் உள்ளார் யாவரும் தம்மை அழகு
செய்து கொண்டு விரைந்து வந்து கோவிலை அடைந்தனர்.

     'ஆல்' அசைநிலை. கோவில் முரசாதலின், 'கோமுரசு' எனப்பட்டது:

             56
குருமாமுனி கூறிய வேவலினால்
மருவாநசை யாமண முந்தவிர்கின்
தருமாதவ னாயின சூசை பணிந்
திருமாமணி யாலய மெய்தினனால்