குரு மா முனி கூறிய
ஏவலினால்,
மருவா நசை ஆ மணமும் தவிர்கின்ற
அரு மா தவன் ஆயின சூசை, பணிந்து,
இரும் மா மணி ஆலயம் எய்தினன் ஆல். |
தான் அணுகத்
தகாத ஆசையாகக் கொண்டு திருமணத்தையும்
தவிர்த்து நிற்கின்ற அரும் பெருந் தவத்தோனாகிய சூசையும், மாமுனிவனும்
தலைமைக் குருவுமாகிய சீமையோன் விடுத்த கட்டளை அது ஆகையினால்
பணிந்து, பெருமையுள்ள சிறந்த மணிகளால் அழகு செய்யப்பட்ட கோவிலை
அடைந்தான்.
தவிர்கின்ற
+ அரு - 'தவிர்கின்றவரு' எனற் பாலது தொகுத்தல்
விகாரம். 'ஆல்' அசைநிலை.
| 57 |
குருமாமணி
யாலொளிர் கோயிலினுட்
டிருமாதினை வேட்டுமெ லாருமுறப்
பொருவா தொளிர் பூங்கொடி யைக்கொணர்வா
னருமாமுனி யங்கண றைந்தனனால் |
| |
குரு மா மணியால்
ஒளிர் கோயிலினுள்
திரு மாதினை வேட்டும் எலாரும் உற,
பொருவாது ஒளிர் பூங்கொடியைக் கொணர்வான்
அரு மா முனி அங்கண் அறைந்தனன் ஆல். |
செந்நிறமுள்ள
சிறந்த மாணிக்கத்தால் ஒளிரும் கோவிலினுள்
அவ்வழகிய பெண்ணை அடைய விரும்பி எல்லாரும் வந்து சேரவே, அரிய
பெரிய முனிவனான சீமையோன் ஒப்பற்று ஒளிரும் பூங்கொடி போன்ற
மரியாளை அங்கு அழைத்து வருமாறு கூறினான்.
'ஆல்' அசைநிலை
| 58 |
தன்னிற்றவி
ராத்தகு பற்றளவா
யுன்னித்தவி ராப்பய மோங்கியபோற்
கன்னிக்கழி வாகுமெ னாக்கதனந்
துன்னிக்கலுழ் வாள்சுடர் சுந்தரியாள். |
|