தன்னில் தவிராத்
தகு பற்று அளவாய்
உன்னித் தவிராப் பயம் ஓங்கிய போல்,
கன்னிக்கு அழிவு ஆகும் எனாக் கதனம்
துன்னிக் கலுழ்வாள் சுடர் சுந்தரியாள்: |
ஒரு பொருள்மீது
கொண்ட நீங்காத மிகுந்த பற்றுக்கு அளவாக
அதற்குக் கேடு வருமோ என்று நினைந்து நீங்காத அச்சம் மேலோங்கி
நிற்பதுபோல், ஒளி பொருந்திய அழகியாகிய மரியாள் தன் கன்னிமைக்கு
அழிவு நேருமோ எனக் கலக்கம் மிகுந்து அழுவாள்:
| 59 |
மின்னுந்திரை
சூழ்விரி மேதினிமே
றுன்னும்முயி ருந்துடர் காவலனீ
யென்னும்பொழு தென்னிறை நின்னையலாற்
பினனும்முயிர்க் காவல னார்பெறவோ. |
| |
"மின்னும் திரைசூழ்
விரி மேதினிமேல்
குன்னும் உயிரும் தொடர் காவலன் நீ
என்னும் பொழுது, என் இறை நின்னை அலால்,
பின்னும் உயிர்க் காவலன் ஆர் பெறவோ?" |
"மின்னும் திரையுள்ள
கடல் சூழ்ந்த விரிந்த இவ்வுலகிற் பொருந்தும்
உயிர்களுக்கெல்லாம் தொடர்ந்த காவலன் நீயே என்னும் பொழுது, என்
இறைவனாகிய உன்னை அல்லாமல், பின்னும் என் உயிர்க்குக் காவலனென்று
யாரை நான் பெற வேண்டுமோ?"
| 60 |
இறையோனடி
யெய்திய வானவரே
பொறையோர்பொரு வாத்துயர் பூத்தயர்வான்
கறையாகுல மற்றுயர் கன்னியரூ
டுறையான்பெய ரத்தகு மோர்விதியேன். |
| |
"இறையோன்
அடி எய்திய வானவரே,
பொறையோர் பொருவாத் துயர் பூத்து அயர்வான்,
கறை ஆகுலம் அற்று உயர் கன்னியர் ஊடு
உறை யான், பெயரத் தகும் ஓர் விதி ஏன்?" |
|