| "ஆண்டவன்
அடியை அடைந்துள்ள வானவர்களே, பாவக் கறையும்
துயரமும் அற்று உயர்ந்துள்ள கன்னியரிடையே இங்கு வாழும் நான்,
உலகத்தவர்க்கு உரிய ஒப்பற்ற துயரம் பொருந்தித்தளரும்படி, இங்கிருந்து
பெயர்ந்து செல்லத்தக்கதொரு கட்டளை ஏன் பிறந்ததோ?"
அயர்வான் -
அயர: 'வான்' ஈற்று வினையெச்சம்.
| 61
|
தாதூதளி
சூழ்தவழ் தண்டொடையால்
மாதூடும னஞ்சுட வானவனே
மீதூதொலி யிங்கித மேயுரையா
னீதூதுந டந்திது நேர்பயனோ. |
| |
"தாது ஊது அளி
சூழ் தவழ் தண் தொடையால்
மாது ஊடு மனம் சுட, வானவனே,
மீது ஊது ஒலி இங்கிதம் மேவு உரையால்
நீ தூது நடந்து இது நேர் பயனோ?" |
வானவனே, மேலுலகில்
பேசும் ஒலியின் இங்கிதம் பொருந்திய
சொல்லால் நீ முன் என்பால் தூது நடந்தாய். மகரந்தத்தை ஊதும் வண்டுகள்
சுற்றிலும் மொய்க்கும் குளிர்ந்த திருமண மாலையால் பெண்ணாகிய என்
மனத்தை ஊடுருவிச் சுடுவதாகிய இதுதான் அதன் நேரான பயனோ?"
| 62
|
பரனோபரி
வற்றரு ளேபணியான்
சுரரோமண மாகுப தூதறைவார்
நரரோவுத வார்நறு மாமணமே
வரலோடுவ ரும்பயன் மாட்சியிதோ |
| |
"பரனோ பரிவு
அற்று, அருளே பணியான்;
சுரரோ மணம் ஆகுப தூது அறைவார்;
நரரோ உதவார்; நறு மா மணமே
வரலொடு வரும் பயன் மாட்சி இதோ?" |
|