|
"ஆண்டவனோ
இரக்கமற்றவன்போல் தனது அருளை எனக்குச்
செய்யான்; வானவரோ திருமணம் ஆகுமாறு தூது உரைப்பார்; மனிதரோ
உதவி செய்யார்; நல்ல சிறந்த திருமணம் வர, அதனோடு கூடிவரும்
பயனின் மாண்பு. இது தானோ?"
|
63 |
நிழலாலய
நீங்கும ணப்பயனாற்
சுழலாயின வென்றுயர் நாளுமெலாம்
புழலாயின புண்ணுழை யப்பொதுளூந்
தழலாயுரு குந்தமி யேனினியே. |
| |
"நிழல் ஆலயம்
நீங்கும் மணப் பயனால்,
சுழல் ஆயின என் துயர். நாளும் எலாம்
புழல் ஆயின புண் நுழையப் பொதுளும்
தழலாய் உருகும் தமியேன் இனியே." |
"நிழல் போல்
உதவிய இக்கோவிலை விட்டு நீங்குவதற்குக் காரணமான
திருமணத்தின் பயனாக, எனது துயரங்கள் என்னைச் சுற்றியே சுழலலாயின.
தனிப்பட்டவளாகிய நான் இனிமேல் எந்நாளும் துளையுண்ட புண்ணினுள்
நுழையக் குவிக்கும் நெருப்புக்கு இரையாகி உருகுவேன்."
உருகும் - உருகுவேன்:
'செய்யும்' என்முற்று தன்மைக்கு வந்தது.
|
64 |
மனனேமற
வாதுவ ருந்துதியே
கனலேயுணு கண்கள்க லுழ்ந்துதிரே
யெனவேயுள மேங்கிய றாதழுவாள்
புனலேபொரு வாவிழி பொங்கிழையாள். |
| |
"மனமே, மறவாது
வருந்துதியே.
கனலே உணு கண்கள், கலுழ்ந்துதிரே."
எனவே உளம் ஏங்கி, அறாது அழுவாள்
புனலே பொருவா. விழி பொங்கு இழையாள். |
|