பக்கம் எண் :

முதற் காண்டம்219

     "நீ விரும்பிய தன்மைக்கு ஒத்திருக்கும் அத்துணைவன், ஓயாத
தவத்தில் உன்னோடு ஒத்தவனுமாய், தூயவர் எவரினும் மேலாக அருள்
கொண்ட தூயவனுமாய் இருத்தலால், ஒளிரும் உன் கன்னிமை கெடாமல்,
வீறு பெற்று இயல்பாய் நிலைக்கும்."
 
              69
குலையேல்குலை யேல்குழை யாமரபாற்
கலையேதரு காட்சிக டந்தறிவோ
டலையேநிக ராந்துணை யாகுமவ
னிலையே நெறி யேயெழ நீயறைவேன்.
 
"குலையேல், குலையேல்! குழையா மரபால்,
கலையே தரு காட்சி கடந்த அறிவோடு,
அலையே நிகர் ஆம் துணை ஆகும் அவன்
நிலையே, நெறியே, எழ நீ அறைவேன்,"

     "மனம் குலையாதே, குலையாதே! மாறாத இனமுறை ஒழுக்கத்தோடு,
கலைகள் தரும் அறிவெல்லாம் கடந்த அறிவோடு கடலையே நிகர்த்த
துணையாக உனக்கு அமையும் அவனது குண நிலையும், ஒழுக்க நெறியும்,
நீ எழுச்சி பெறுமாறு எடுத்துச் சொல்வேன். கேள்."

     'மரபு' என்றது, தாவிதனின் இனமுறைப் பிறப்பிற்கு ஏற்ற ஒழுக்கத்தைச்
சுட்டியதாம். கடந்தறிவு-கடந்த + அறிவு-தொகுத்தல் விகாரம்.
 
             70
தாய்செய்சிறை நீக்குமு னர்தரையிற்
பேய்செய்சிறை நீத்தருள் பெற்றுடலா
நோய்செய்சிறை நூறுப கன்னியறா
நீய்செய்சிறை நேர்பொறி காத்தனனால்.
 
"தாய் செய் சிறை நீக்கு முனர், தரையில்
பேய் செய் சிறை நீத்து அருள் பெற்று, உடல் ஆம்
நோய் செய் சிறை நூறுப, கன்னி அறா
நீ செய் சிறை நேர், பொறி காத்தனன் ஆல்."