பக்கம் எண் :

முதற் காண்டம்220

     "அவன் தன் தாய் செய்த சிறையாகிய வயிற்றினின்று பிறக்குமுன்னரே,
இவ்வுலகில் பேய் மானிடர்க்கெல்லாம் செய்கின்ற கருவினைப் (சென்மப்)
பாவமாகிய சிறையை விலக்கித் தெய்வ அருள் பெற்று, பாவ நோயை
விளைவிக்கும் உடலாகிய சிறையை ஒழிக்கும் பொருட்டு, கன்னிமை கெடாத
வண்ணம் நீ செய்யும் காவலுக்கு நிகராக, தன் ஐம்பொறிகளையும் அடக்கிக்
காத்து வருகின்றான்."

     'ஆல்' அசை நிலை. 'நீ' ஓசைபொருட்டு 'நீய்' என நின்றது. பேய்
செய் சிறை நீத்தது: 3-வது, வளன் சனித்த படலம், 49-50 காண்க.
 
              71
அடையாரண நேரற நேர்வடிவான்
கொடையாசையி னாற்குளிர் வானனைவா
னுடைஞானறி வாலொளி மானவருட்
கடையாவதி லாற்கட னேரினனால்
 
"அடை ஆரணம் நேர், அறம் நேர்வடிவான்;
கொடை ஆசையினால் குளிர் வான் அனைவான்;
உடை ஞான அறிவால் ஒளி மான, அருள்
கடை ஆவது இலால், கடல் நேரினன் ஆல்."

    "தான் அடைந்துள்ள வேதத்திற்கு ஒப்பும், புண்ணியத்திற்கு ஒப்புமான
வடிவம் கொண்டவன், தானத்தின் மீது வைத்த ஆசையினால் குளிர்ந்த
கருமேகத்திற்கு ஒப்பானவன்; கொண்டுள்ள ஞான அறிவால் ஞாயிறு
போலவும், தெய்வ அருளுக்கு முடிவே இல்லாமையால், கடல் போலவும்
அமைந்துள்ளான்."

     ஞானறிவு - ஞான + அறிவு தொகுத்தல் விகாரம். 'ஆல்' அசைநிலை. 

               72
தீயொக்குவ னந்தெளி யாததவந்
தாயொக்கும ருட்டொகை வென்றதயை
மீயொக்கும வர்க்குரி மேதையுள
நீயொக்குநி லைக்குரி நீர்மையினான்.