பக்கம் எண் :

முதற் காண்டம்221

"தீ ஒக்கும் வனம் தெளியாத தவம்,
தாய் ஒக்கும் அருள் தகை வென்ற தயை,
மீ ஒக்கும் அவர்க்கு உரி மேதை உளன்,
நீ ஒக்கும் நிலைக்கு உரி நீர்மையினான்."

     "அவன் தீயைப் போல் சுடும் பாலைவனமும் கண்டு தெளியாத
தவமும், தாய்க்கு நிகரான அருளின் தகுதியையும் வென்ற கருணையும்,
வானுலகமும் ஒத்துக்கொள்ளத் தக்கவர்க்கு உரிய பேரறிவும் உடையவனாய்,
நீ ஒத்துக்கொள்ளும் நிலைக்கு உரிய இயல்பெல்லாம் கொண்டவன்."
 
             73
விண்ணாரும வர்க்கும்வி யப்புறவே
கண்ணாதியெ லாப்பொறி காக்குதலாற்
றெண்ணாழியி னுந்திரை கொண்ணசையற்
றெண்ணானிவ றானெனை நீங்குமெலாம்.
 
"விண் ஆரும் அவர்க்கும் வியப்பு உறவே,
கண் ஆதி எலாப் பொறி காக்குதலால்,
தெண் ஆழியினும் திரைகொள் நசை அற்று,
எண்ணான், இவறான் எனைநீங்கும் எலாம்."

    "விண்ணுலகில் நிறைந்துள்ள வானவர்க்கும் வியப்பு ஏற்படும்வண்ணம்,
தன் கண் முதலிய எல்லாப் பொறிகளையும் அடக்கிக் காத்தலால், தெளிந்த
கடலின் அலையைக் காட்டிலும் மனத்தில் அலையடித்துக் கொள்வதாகிய
ஆசை அற்றவனாய், என்னைத் தவிர மற்ற எல்லாவற்றையும் அவன்
எண்ணவும் மாட்டான்; விரும்பவும் மாட்டான்.

     'எனை நீங்கும் எலாம்' என்பதற்கு, 'என்னைவிட்டு நீங்குவதற்குக்
காரணமான எல்லாம்' என்று பொருள் கொள்வதும் ஒன்று.
 
            74
எனக்காவலி யற்றிய யாரினுமுள்
மனக்காவலி னால்மற வாப்பிரியன்
றன க்காயவ ரத்தம ரர்த்தகைமே
லுன க்காகுவ தற்குரி காவலனே.