"எனக்கு ஆவல்
இயற்றிய யாரினும் உள்
மனக் காவலினால் மறவாப் பிரியன்,
தனக்கு ஆய வரத்து அமரர்த் தகைமேல்,
உனக்கு ஆகுவதற்கு உரி காவலனே," |
"தனக்கு உரிமையான
வரங்களினால் வானவர்தம் தகுதிக்கும்
மேலானவனாய், உனக்கு மணமகன் ஆவதற்கு உரிய அக்காவலன்,
எனக்கு விருப்பம் வருவித்த பிறர் யாவரைக் காட்டிலும் தன் உள்
மனத்தைக் காவல் செய்த திறத்தால் என்றும் மறக்கமுடியாத
விருப்பத்திற்கு உரியவன் ஆயினான்."
| 75 |
என்றானிறை
யோன்களி கூர்ந்திவளும்
வன்றாடொழு வாடகை வானவருஞ்
சென்றார்விழி நீர்த்திரை மாற்றியறா
தன்றாருர னாகியெ ழுந்தனளே. |
| |
என்றான் இறையோன்.
களிகூர்ந்து இவளும்
வன்தாள் தொழுவாள். தகை வானவரும்
சென்று, ஆர் விழி நீர்த்திரை மாற்றி ஆறாது,
அன்று ஆர் உரன் ஆகி எழுந்தனளே. |
என்று மேலே
காட்டியவாறு ஆண்டவன் கூறினான். மரியாளாகிய
இவளும் களிகூர்ந்து, ஆண்டவனின் வல்லமைகொண்ட திருவடிகளைத்
தொழுபவளாய் விழுந்தாள். பெருமையுள்ள வானவரும் அங்கே சென்று,
நிறைந்த கண்ணீர் வெள்ளத்தை மாற்றியும் அது அடங்காமல், அன்று
நிறைந்த மனவுறுதி கொண்டு, தானே எழுந்தாள்.
'எழுந்தனள்'
எனப் பின் வந்தமையின், 'தொழுவாள்' என்றவிடத்து,
'விழுந்தாள்' என்பது சேர்க்கப்பட்டது. மகிழ்ச்சிக் கண்ணீராதலின்,
துடைக்கத் துடைக்க அடங்காதாயிற்று. 'அறாது' என்பதை உரன் என்பதற்கு
அடைமொழியாக்கி 'மாறாத மனவுறுதி' எனப் பொருள் கொள்ளுதலும்
உண்டு. |