பக்கம் எண் :

முதற் காண்டம்223

            76
ஈறொப்பள வாதியி யாவுமிலா
தாறொப்பில நீர்மையி னானருளுட்
டேறொப்பில வூக்கமொ டுந்தெருளாள்
நூறொப்பில தோழியர் நோக்கினளே.
 
 ஈறு ஒப்பு அளவு ஆதி யாவும் இலாது
ஆறு ஒப்பு இல நீர்மையினான் அருள் உள்
தேறு ஒப்பு இல ஊக்கமொடும் தெருளாள்
நூறு ஒப்பு இல தோழியர் நோக்கினளே.

     தனக்கு முடிவும் ஒப்பும் அளவும் தொடக்கமும் பிற குறைகள் யாவும்
இல்லாது, ஒப்பற்ற ஆறு குணங்களை உடைய ஆண்டவன் அருளினால்
உள்ளம் தேறிய ஒப்பற்ற ஊக்கத்தோடு தெளிவு கொண்ட மரியாள், தனது
ஒப்பற்ற தோழியர் நூறு பேர் அப்பொழுது தன்னை நோக்கி வரக் கண்டாள்.

     இத்தோழியர் மரியாளோடு கன்னி மாடத்தில் இருந்த பிற கன்னிப்
பெண்கள் என்று அறிக. இறைவனின் ஒப்பற்ற ஆறு குணங்கள்: தன்
வயத்தன் ஆதல், முதல் இலன் ஆதல், உடம்பு இலன் ஆதல், எல்லா
நலமும் உளன் ஆதல், எங்கும் வியாபகன் ஆதல், எவற்றிற்கும் காரணன்
ஆதல். (சதுரகராதி: தொகை-ஈச்சுரன் முக்கிய குணம்)

 
தோழியரும் மரியாளும்

கலி நிலைத்துறை

     (ஐஞ்சீரடி நான்கு கொண்டு, அடிக்கண் வெண்டளைமிக்கும்,
கலித்தளையாயின் நேரொன்றாசிரியத்தளை தொடர்ந்தும் வருவது)

                   77
இடியொத் தலர்ந்த வெழிலேந்து சிலம்பி ரட்டக்
குடியொத் தலர்ந்த விருள்வை கியகூந்த னல்லார்
முடியொத் தலர்ந்த மதிநாண முதிர்ந்த பைம்பொற் கொடியொத் தலர்ந்த கொடிவேய் துபசூழ்ந் தடைந்தார்.