இடி ஒத்து, அலர்ந்த
எழில் ஏந்து சிலம்பு, இரட்ட,
குடி ஒத்து, அலர்ந்த இருள், வைகிய கூந்தல் நல்லார்,
முடி ஒத்து அலர்ந்த மதி நாண, முதிர்ந்த பைம் பொற்
கொடி ஒத்து, அலர்ந்த கொடி வேய்துப, சூழ்ந்து அடைந்தார். |
பரந்த இருள்
குடியிருத்தல் போன்று அமைந்த கூந்தலை உடைய
மகளிர், வானத்தின் முடிபோன்று ஒளி பரப்பிய மதி தம் முகங்கண்டு
நாண, ஒளி படர்ந்த அழகைக் கொண்டுள்ள தம் சிலம்புகள் இடியுண்ட
தன்மையாய் மாறி மாறி ஒலிக்க, மலர்ந்த பூங்கொடி போன்ற மரியாளை
செய்யுமாறு, தாம் முதிர்ந்த பசும்பொற்கொடிபோல வந்து சூழ்ந்தனர்.
| 78
|
வான்வைத்
தவிழ்ந்த மலர்போ லொளிர்மீன்கள் மானத்
தேன்வைத் தவிழ்ந்த சினைநா டளிசேர்ந்து விம்மக்
கான்வைத் தவிழ்ந்த கடிமாலை கனிந்து சூழ
மீன்வைத் தவிழ்ந்த விழியார் சிலரே மிடைந்தார். |
| |
வான் வைத்து
அவிழ்ந்த மலர் போல் ஒளிர் மீன்கள் மானத்
தேன் வைத்து அவிழ்ந்த சினை நாடு அளி சேர்ந்து விம்ம,
கான் வைத்து அவிழ்ந்த கடி மாலை கனிந்து சூழ,
மீன் வைத்து அவிழ்ந்த விழியார் சிலரே, மிடைந்தார். |
கயல் மீன்களைப்
பதித்து வைத்தது போன்று மலர்ந்த கண்களை
உடைய மகளிர் சிலர், வானத்தில் இட்டு வைத்து விரிந்த மலர்போல்
ஒளிரும் விண்மீன்கள்போலத் தேனை உள்ளே கொண்டிருந்து மலர்ந்த
அரும்புகளை நாடும் வண்டுகள் சேர்ந்து இரைய, வாசனை கொண்டு
மலர்ந்த புதிய மாலையை அவளுக்குக் கனிவோடு சூட்ட நெருங்கினர்.
| 79
|
கடியா
யலர்ந்த வொளிர்காந் தளினேர் கரத்தி
லிடியா யணிப்பொன் வளையிட் டணிவாரு மல்லாற்
கொடியாய தண்ண நறைநா னமொடுங் குளிர்ந்த
பொடியாய சுண்ணஞ் சிலர்பூ சிடவும் பொதிர்ந்தார். |
|