பக்கம் எண் :

முதற் காண்டம்227

                  83
தூங்காய மாலைத் தொடையோ மணவாது தூய்பொன்
வீங்காய வாரக் கலனோ மிளிராது மெந்தை
பாங்காய பாதம் பணியே யழகேய தல்லா
லீங்காய யாவு மிழிவென்று விரைந்த கன்றாள்.
 
தூங்கு ஆய மாலைத் தொடையோ மணவாது; தூய் பொன்
வீங்கு ஆய ஆரக் கலனோ மிளிராதுஉம். எந்தை
பாங்கு ஆய பாதம் பணியே; அழகே. அது அல்லால்,
ஈங்கு ஆய யாவும் இழிவு." என்று விரைந்து அகன்றாள்.

    "மார்பில் தொங்குதலை உடைய, மலரால் தொடுக்கப்பட்ட மாலையோ
மணம் தராது; தூய பொன்னால் வீங்கிய ஆரமாகிய அணிகலனோ ஒளி
தராது; எம் தந்தையாகிய ஆண்டவனின் அழகுப் பாங்குள்ள அடியே
அணிகலன் ஆகும்; அழகும் ஆகும். அது ஒன்றேயல்லாமல், இவ்வுலகில்
உள்ளன யாவும் இகழ்ச்சிக்கு உரியனவே ஆகும்." என்று கூறி விரைந்து
நீங்கினாள்.

     'மாலைத் தொடை' என்பதனைத் 'தொடை மாலை' என்று மாறுக.
மிளிராதும்: முன்நின்ற மிளிராது என்ற சொல்லின் குற்றியலுகரம் பின்நின்ற
'எந்தை' என்ற சொல்லின் உயிரோடு கூடுகையிற் கெட்டு 'மிளிராதெந்தை'
என்று ஆகிச் செய்யுளோசை கெடாவண்ணம் இடையே 'உம்' சாரியையாய்
நின்று பிரித்தது.
 
                  84
விண்ணாவி யாய கதிர்தூ செனவேய்ந்து விண்மேற்
கண்ணாவி யாய கடிமீன் முடிகவ்வி நற்றாள்
தண்ணாவி யாய மதிதாங் கியதாரின் மேலும்
பண்ணாவி யாய குரலாட் கொருபாங்கு நன்றோ.
 
விண் ஆவி ஆய கதிர் தூசு என வேய்ந்து, விண் மேல்
கண் ஆவி ஆய கடி மீன் முடி கவ்வி, நல் தாள
தண் ஆவி ஆய மதி தாங்கிய தாரின் மேலும்
பண் ஆவி ஆய குரலாட்கு ஒரு பாங்கு நன்றோ?