|
வானவரும் அங்கு
வந்தடைந்து, அறத்தை மாணிக்கமென்று
அவளுக்கு அணிந்தனர்; விண்மீன் போல் ஒளி நிறையும் தெய்வ ஞானத்தை
மிளிர்கின்ற தோடு என அணிகின்றனர்; தேன் நிறையும் மாலைத் திரள்
என்று தெய்வ அருளைச் சேர்க்கின்றனர்; காட்டில் நிறைந்து கிடக்கும்
வாய்ப்பான தவத்தை ஆடையாய் அணிந்தனர்.
மரியாள்
கோவில் புகுதல்
- மா, புளிமா,
புளிமா, புளிமா
| 87
|
அலினா
ரொளிரா ரியதா ரகையுண்
மலிபா லொளிகால் மதிபோ வதுபோ
லொலியா யசிலம் புடைமங் கையருட்
பொலியா லயமூ டிவள்புக் கனளே. |
| |
அலின் ஆர்
ஒளிர் ஆரிய தாரகையுள்
மலி பால் ஒளி கால் மதி போவது போல்,
ஒலி ஆய சிலம்பு உடை மங்கையருள்
பொலி ஆலயம் ஊடு இவள் புக்கனளே. |
இரவில் வானெங்கும்
நிறைந்து ஒளிரும் அழகிய விண்மீன்களிடையே
நிறைந்த பாலொளியைப் பரப்பும் மதி போவது போல், மரியாள் என்னும்
இவள் ஒலி பொருந்திய சிலம்பு அணிந்துள்ள மகளிரிடையே பொலிவுடன்
விளங்கும் கோவிலின் ஊடே புகுந்து சென்றாள்.
|
88
|
அடரற்
றடிவைத் தனளண் டியவாய்
சுடரற் றிருளுந் துகளும் வெறியும்
படரற் றிசைபன் னெழுகா தமகன்
றிடரற் றிழிவற் றெழுசீ ரடியாள்.
|
| |
அடர்
அற்று அடி வைத்தனள், அண்டிய
வாய்,
சுடர் அற்று, இருளும் துகளும் வெறியும்
படர் அற்று, இசை பன் எழு காதம் அகன்று,
இடர் அற்று, இழிவி அற்று எழு சீர் அடியாள். |
|