|
தான் சென்ற
இடமெல்லாம், வேறு ஒளியின் துணை இல்லாமல்,
இருளும் பாவமும் பேயும் படர்வதற்கு வழியில்லாமல், அளவாய்ச்
சொல்லப்படுகின்ற பதினேழு காத தூரம் விலகி ஓட, அவற்றால் தனக்கு
நேரும் துன்பமும் அற்று, இழிவும் அற்று எழுச்சி கொள்ளும் சிறந்த அடிகளைக் கொண்டுள்ள
மரியாள், நெருக்கமற்று அடிவைத்து நடந்தாள்.
புது மணமகள் போலி நாணங் காட்டி அடிமேல் அடி வைத்து நடப்பதுபோலன்றி, மரியாள்
விரையாமலும் நெருங்காமலும் இயல்பாக நடந்தாளென்பது கருத்து.
|
89
|
வையும்
பொருவா மடவாள் வரவம்
பெய்யுங் கொடுவே ளொடுகா மிழிவும்
பொய்யும் பவமும் மகலும் புசியா
தையுண் ணலர்கண் டளிநீங் கினபோல். |
| |
வையும் பொருவா
மடவாள் வர, அம்பு
எய்யும் கொடு வேளொடு, காம் இழிவும்
பொய்யும் பவமும் அகலும், புசியாது
ஐ உண் அலர் கண்டு அளி நீங்குவ போல். |
உலகமெங்கும்
தனக்கு ஒப்புக் காண இயலாத கன்னிப் பெண்ணாகிய
மரியாள் வரவும், தாம் உண்ணக்கூடாத அழகு பொருந்திய மலர்களைக்
கண்டு வண்டுகள் நீங்கிச் சென்ற தன்மையாய், காம அம்பு எய்யும் கொடிய
மன்மதனோடு, காமம் பற்றி எழும் இழிந்த நினைவுகளும் பொய்யும்
பாவமும் விலகி ஓடும்.
காம் - 'காமம்'
என்பதன் இடைக்குறை, பவம் - 'பாவம்' என்பதன்
குறுக்கல் விகாரம். வேள் - மன்மதன்: காமவிகாரத்தின் உருவகமாய்
அமைந்த தேவன்.
| 90 |
காமக்
கனலாற் றினநோக் கியகண்
வீமக் கருள்விட் டனமூ டியகண்
ணேமக் கதிகாட் டும்விழித் திருகண்
வாமக் கதிர்வாட் டுகளித் தகணே. |
|