காமக் கனல்
ஆற்றின நோக்கிய கண்;
வீமக் கருள் விட்டன மூடிய கண்;
ஏமக் கதி காட்டும் விழித்த இரு கண்,
வாமக் கதிர் வாட்டு களித்த கணே. |
அழகிய கதிரவனையும்
ஒளியால் வாட்டும் இவளது தெய்வீக மகிழ்ச்சி
பொங்கும் கண்கள், கூர்ந்து நோக்கிய கண்களாயின், காம நெருப்பை
அவித்தன; மூடிய கண்களாயின், அச்சத்தோடு கூடிய கலகத்தை வரவிட்டன;
விழித்த இரு கண்களாயின், இன்பம் தரும் மோட்ச கதியையே
இங்குக்கொண்டுவந்து காட்டும்.
விழித்த + இரு
- 'விழித்தவிரு' என்பது, 'விழித்திரு' எனத் தொகுத்தல்
விகாரம் கொண்டது.
| 91 |
வில்லே
வியகோல் விழியா ரறைதீஞ்
சொல்லே யுயிருண் ணெனவே சொலுவார்
கொல்லே தமிலாக் குதலைச் சொனலா
ணல்லே யுயிர்காக் குநவின் றசொலால். |
| |
வில் ஏவிய கோல்
விழியார் அறை தீம்
சொல்லே உயிர் உண் எனவே சொலுவார்.
கொல் ஏதம் இலாக் குதலைச் சொல் நலாள்
நல்லே உயிர் காக்கும் நவின்ற சொலால். |
வில் ஏவிய
அம்பு போன்ற கண்களை உடைய மகளிர் சொல்லும்
இனிய சொல்லுமே ஆடவர் உயிரை உண்ணுமென்று அறிந்தோர் கூறுவர்.
கொல்லும் குற்றமே இல்லாத மழலைச் சொல்லை உடைய நல்லவளாகிய
மரியாள் தான் சொல்லிய சொல்லால் உயிர்களை நன்றாகவே காப்பாள்.
'காக்கும் -
காப்பாள்: செய்யும்' என் முற்று பெண்பாலுக்கு வந்தது.
இரண்டாமடியில் 'உண்' என்ற சொல் 'உண்ணும்' என்ற பொருளில் நின்றது. |