பூரியார் திருப்
போல் தலை பசிய கூழ் நிறுவி,
நீரினார் தலை நேர நேர் வளை வொடு பழுத்த
ஆரம் மானும் நெல் அறுத்து, அரி கொண்டு போய் அங்கண்,
''போர் இது ஆம்,'' எனக் களித்தனர் போர் பல புனைவார். |
செல்வம் படைத்த
அற்பர் போல் பசும் பயிராய் இருந்த காலத்தில்
தலை நிமிர்ந்து நின்று, இப்பொழுது நல்லியல்பு உடையார் தலை போல
முன்னே தலை வளைவோடும் பழுத்த முத்துப் போன்ற நெல்லை உழவர்
அறுத்து, அரிக் கட்டுகளை அங்குள்ள களத்திற்குச் சுமந்து கொண்டு போய்,
''சூதேய நாடு அறிந்த போர் இதுவே ஆகும்'', என்று சொல்லி, களிப்போடு
அவற்றைப் பல நெற்போர்களாக அழகோடு குவித்து வைப்பர்.
அரிப்
போரிலும் நெல்லை அடித்தெடுக்காத நெற் போரும்,
அடித்தெடுத்த வைக்கோற் போரும் என இரு வகை உண்டு. இக்குவியல்கள்
போர் எனப்படுதலோடு படை கொண்டு செய்யும் போரும் உண்டு. இப்போர்
சூதேய நாட்டில் இல்லையென்பது கருத்து. ''சொல்லருஞ் சூற்பசும் பாம்பின்
தோற்றம் போல், மெல்லவே கரு இருந்து ஈன்று மேலலார், செல்வமே
போல் தலை நிறுவித் தேர்ந்த நூற், கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக்
காய்த்தவே,'' என்ற சிந்தாமணிப் பாடல் (53) ஒப்பு நோக்குக.
15
|
மெய்க
லந்தபொய் விலக்கிமெய் கொள்பவர்
வினைபோல்
வைக லந்தநெல் பகட்டினாற் றெழித்துவை மறுத்துக்
வைக லந்தடுத் தேற்குநர்க் களித்தபின் களித்துத்
துய்க லந்தநெல் லுண்கவு மீகவுந் தொகுப்பார் |
|
மெய்
கலந்த பொய் விலக்கி மெய் கொள்பவர் வினைபோல்,
வை கலந்த நெல் பகட்டினால் தெழித்து, வை மறுத்து,
கை கலந்து அடுத்து ஏற்குநர்க்கு அளித்த பின், களித்து,
துய் கலந்த நெல், உண்கவும் ஈகவும் தொகுப்பார். |
மெய்யோடு கலந்த
பொய்யை விலக்கி மெய்யை மட்டும் கொள்ளும்
மேலோர் செயலுக்கு ஏற்ப, உழவர் வைக்கோலோடு சேர்ந்திருந்த நெல்லை
எருமைக் கடாக்களால் மிதித்து, வைக்கோலைப் பிரித்து, தூய்மை
பொருந்திய நெல்லை முதலில் இரு கைகளும் பொருந்த அடுத்து வந்து
இரப்பவர்க்குக் கொடுத்து, பின் தாம் உண்ணவும் பிறருக்கு ஈயவுமென்று
களிப்போடு களஞ்சியங்களில் சேர்த்து வைப்பர்.
|