'துய் கலந்த
நெல்' என்றதனால், நெல்லைப் பதரும் சண்டும் நீக்கிக்
கொண்டது பெறப்படும். களத்து வந்து இரந்தோருக்கு இரு கை நிறைய
வாரிக் கொடுத்ததோடு, இல்லத்து வந்து இரப்போர்க்கும் கொடுக்கத்
தொகுத்தனர் என்பது கருத்து.
வாழ்க்கை
வளம்
- மா, கூவிளம், -மா, கூவிளம்.
16
|
ஈத
லோடிசை யினிய வாழ்வுக
ளாத லோடற னழிவி லாக்கினர்
காத லோடுடல் கடிய நாள்வர
வீத லோடுறும் வீட்டில் வாழ்வரே. |
|
ஈதலோடு
இசை இனிய வாழ்வுகள்
ஆதலோடு அறன் அழிவு இல் ஆக்கினர்;
காதலோடு உடல் கடிய நாள் வர
வீதலோடு உறும் வீட்டில் வாழ்வரே. |
சூதேய நாட்டார்
இரவலர்க்கு ஈதலோடு அதனால் வரும் புகழும்,
இனிய வாழ்வுகள் அமைவதோடு புண்ணியமும் அழிவில்லாத முறையில்
தமக்கு ஆக்கிக் கொண்டனர். அதனால், தம் உடலை விட்டுப் பிரிய நாள்
வரவும் ஆசையோடு மடிவர்; மடிந்ததும் தாம் சென்று சேரும் வான் வீட்டில்
நல்வாழ்வு பெறுவர்.
''ஈதல் இசைபட
வாழ்தல் அதுவல்லது
ஓதியம் இல்லை உயிர்க்கு''
என்ற குறள் (231) இங்கு ஒப்புநோக்கத்தக்கது.
17
|
மறமொ
டாகுல மலிந்த தீதெலாம்
புறமொ டாகையின் பொருவி லாவள
ரறமொ டான்றசூ தேய நாடமை
திறமொ டாண்மையைச் செப்பச் சீரதோ |
|
மறமொடு
ஆகுலம் மலிந்த தீது எலாம்
புறமொடு ஆகையின், பொருவு இலா வளர்
அறமொடு ஆன்ற சூதேய நாடு அமை
திறமொடு ஆண்மையைச் செப்பச் சீரதோ? |
|