பக்கம் எண் :

முதற் காண்டம்25

     பாவத்தோடு துன்பமும் மற்ற மிகுதியான தீமைகள் எல்லாமுமே
அந்நாட்டிற்குப் புறத்தே நின்று போயின. ஆதலால் ஒப்பில்லாது வளர்கின்ற
புண்ணியத்தால் மாண்புற்ற சூதேய நாட்டில் அமைந்துள்ள திறமையையும்
ஆண்மையையும் எடுத்துச் சொல்லுதல் இயலுவதோ?
       
                18
மிடியி லார்நயன் விளைவில் மாற்றுவான்
முடியி லார்கனிப் பொறைபொ றாமுயன்
றடியி லாருயி ரமைந்த நீர்தொழக்
கடியி லார்மரம் வளைதல் காணுமே.
 
மிடியில் ஆர் நயன் விளைவில் மாற்றுவான்,
முடியில் ஆர் கனிப் பொறை பொறா, முயன்று,
அடியில் ஆருயிர் அமைந்த நீர் தொழக்
கடியில் ஆர் மரம் வளைதல் காணுமே.

     நந்தவனத்தில் நிறைந்துள்ள மரங்கள் தம் உச்சியில் நிறைந்துள்ள
கனிகளின் பாரம் தாங்காமல் வளையும். அது, வறுமைக் காலத்தில் தாம்
அடைந்துள்ள நன்மையை மக்கள் விளைச்சல் நாளில் கொடுத்துத்
தீர்ப்பதுபோல், மரங்கள் தமக்கு அடியில் அருமையான உயிராய்
அமைந்து உதவிய நீரை முயன்று தொழுவதுபோல் தோன்றும்.
     
                19
ஆலை யார்புகை முகிலென் றார்ப்பெழச்
சோலை யார்மயில் துள்ளி மாங்குயில்
மாலை யாரிருள் விரும்பு மாக்கள்காண்
மேலை யாரென மெலிந்து தேம்புமால்.
 
ஆலை ஆர் புகை முகில் என்று, ஆர்ப்பு எழ,
சோலை ஆர் மயில் துள்ளி, மாங்குயில்,
மாலை ஆர் இருள் விரும்பும் மாக்கள் காண்
மேலையார் என, மெலிந்து தேம்பும் ஆல்.

     கரும்பாலையினின்று நிறைந்து மேல் எழும் கரும் புகையைக் கார்
மேகம் என்று கருதி, சோலையில் நிறைந்துள்ள மயில்கள் ஆரவாரக் குரல்
எழுப்பித் துள்ளி ஆடும். மாமரத்துக் குயில்களோ, மாலைப்பொழுதில்,
நிறையும் இருளை விரும்பும் தீய மக்களைக்கண்ட மேலோர்போல்,
மெலிந்து வருந்தும்.

     'ஆல்' அசை நிலை. இப்பாடல் மயக்கவணி.