பக்கம் எண் :

முதற் காண்டம்233

     'தோன்றும்' என ஒரு சொல் வருவிக்கப்பட்டது. விண்டனர்
பார்க்குதல்- விண்டு பார்க்குதல்: 'விண்டனர்' முற்றெச்சம்;
 
            94
அருஞா னமுமா னமுமா யறிவு
மிருமூக் கமுமாக் கமுமாங் கெவருங்
கருதா வழிகண் வழிமேய்ந் துமனந்
தெருடா வருடேர்ந் துதெளிந் தனரே.
 
அரு ஞானமும் மானமும் ஆய் அறிவும்
இரும் ஊக்கமும் ஆக்கமும், ஆங்கு எவரும்
கருதா வழி, கண் வழி மேய்ந்து, மனம்
தெருள் தாவு அருள் தேர்ந்து தெளிந்தனரே.

     அங்கு வந்து கூடிய யாவரும், கருதக்கூடாத வகையில், அரிய
ஞானத்தையும் பெருமையையும் ஆராய்ந்து காணும் அறிவையும் மிகுந்த
ஊக்கத்தையும் பிற நன்மைகளையும் தங்கள் கண்வழியாக உட்கொண்டு,
தெளிவை எட்டிப் பிடிக்கத்தக்க தெய்வ அருளில் தேர்ச்சி பெற்று மனம்
தெளிந்தனர்.
 
               95
வீடா டிவிளங் கெழில்வேய்ந் தமுகத்
தாடா டிவிரும் பியழுந் தியகண்
ணேடா டிவழந் தவிளங் கனிதே
னூடா டியுவந் தளியொத் தனவாம்.
 
வீடு ஆடி விளங்கு எழில் வேய்ந்த முகத்து
ஆடு ஆடி விரும்பி அழுந்திய கண்,
ஏடு ஆடி வடிந்த இளங் கனி தேன்.
ஊடு ஆடி உவந்த அளி ஒத்தன ஆம்.

     வீட்டுலக இன்பம் நிழலாடி விளங்கிய மரியாளின் அழகு பொருந்திய
முகத்தில் ஆட்டம் ஆடி விரும்பிப் பதிந்த அவர்கள் கண்கள், மலர்
இதழ்களிடையே அசைந்து வடிந்த புதிய கனிவான தேனின் ஊடே பறந்து
மொய்த்து மகிழ்ந்த வண்டுகளை ஒத்தன ஆகும்.

     உவந்த + அளி - உவந்தவளி. அது 'உவந்தளி' என வந்தது
தொகுத்தல் விகாரம்.