கண்டோர்
கூற்று
| 96 |
குறையீர்ந்
துயர்வான் குடியா யவிவட்
கறையீர்ந் தெழில்கா ணவெமக் கிருகண்
முறையீந் தலதா யிரகண் முதலா
மிறையீந் தனனே லினிதென் றறைவார். |
| |
"குறை ஈர்ந்து,
உயர் வான் குடி ஆய இவள்
கறை ஈர்ந்த எழில் காண, எமக்கு இரு கண்
முறை ஈந்து அலது, ஆயிர கண் முதல் ஆம்
இறை ஈந்தனனேல், இனிது!" என்று அறைவார். |
மரியாளைக் கண்டோர்,
"குற்றங்களையெல்லாம் அறுத்தெறிந்து,
உயர்ந்த வான்வீட்டில் இப்பொழுதே குடியிருப்பவளாகிய இவளது
மாசெல்லாம் அறுத்தெறிந்த அழகைக் காண்பதற்கு, எல்லோருக்கும்
உண்டான முறைபோல் எமக்கும் இரண்டு கண்களே தந்ததல்லாமல்,
யாவற்றிற்கும் முதல்வனாகிய ஆண்டவன் ஆயிரம் கண்களைத்
தந்திருப்பானாகில், எவ்வளவு இனிதாய் இருக்கும்!" என்று கூறுவர்.
ஈர்ந்த + எழில்
- ஈர்ந்தவெழில். அது 'ஈர்ந்தெழில்' என நின்றது
தொகுத்தல் விகாரம்.
| 97 |
மறைசெய்
தவனப் பெனவாய்ந் தநலாள்
மிறைசெய் ததிலா விழியும் முளமுஞ்
சிறைசெய் தனகா லுநலஞ் செயுநன்
முறைசெய் தனவே தெனவே மொழிவார். |
| |
"மறை செய்த
வனப்பு என வாய்ந்த நலாள்,
மிறை செய்தது இலா விழியும் உளமும்
சிறை செய்தன காலும், நலம் செயும் நல்
முறை செய்தன ஏது!" எனவே மொழிவார். |
"வேதம் அமைத்துத்
தந்த அழகு இது என்று சொல்லும்படி வாய்த்த
நல்லவளாகிய இவள், குற்றமே செய்வதற்கு இடமில்லாத வகையில் நம்
கண்ணையும் மனத்தையும் சிறைப்படுத்திய போதிலும், நமக்கு இன்பமே
தரும் நல்ல முறையில் அதனைச் செய்து முடித்த திறம்தான் எத்தகையது!"
என்றும் வியந்து சொல்வர். |