|
குற்றத்தை நாடும்
இயல்புள்ள கண்ணும் மனமும் தடை ஏற்படின்
துன்பங் கொள்வதற்கு மாறாக, மரியாளால் இன்பமே கண்டன என்பது
கருத்து.
| 98 |
எள்வா
ரிலவிக் கவினா லெமதுள்
கள்வாய்க் களிநாம் பெறலென் களவைக்
கொள்வா ருமலா துகொடுப் பவரோ
வுள்வா ரியவின் புளரென் றறைவார். |
| |
"எள்வார் இல
இக் கவினால் எமது உள்
கள்வு ஆய், களி நாம் பெறல் என்! களவைக்
கொள்வாரும் அலாது, கொடுப்பவரோ
உள் வாரிய இன்பு உளர்!" என்று அறைவார். |
"இவளது, இகழ்வார்
இல்லாத இவ்வழகினால் நமது உள்ளம் களவு
போன பின்னரும், நாம் களிப்பே அடைவது எவ்வாறு? களவைக்
கொள்பவரே அல்லாது, களவு கொடுப்பவரோ தம் உள்ளத்தை அள்ளிய
தன்மையில் இன்பம் கொள்பவர் ஆவார்?" என்றும் உரைப்பர்.
| 99 |
அருகா
யினவா னழகார் வதனம்
பருகா யினவெம் விழிபார்த் தலினா
முருகா தளியுற் றிலமே லெமதுள்
திருகா தனகற் றிரளென் றறைவார். |
| |
"அருகு ஆயின வான்
அழகு ஆர் வதனம்
பருகு ஆயின எம் விழி பார்த்தலின், நாம்
உருகாது அளி உற்றிலமேல், எமது உள்
திருகாதன கல் திரள்!" என்று அறைவார். |
|