உள்ளும் பொழுதே,
இவன் ஓங்கிய கோல்
கள்ளும் கடியும் பொழி காமர் இதழ்
விள்ளும் செழு வெண் மலர் பூத்தமையால்,
மள்ளும் விரை ஆலயம் மல்கியதே. |
இவ்வாறு எண்ணும்
பொழுதே, இவன் உயர்த்திப் பிடித்திருந்த
கோலில் தேனும் மணமும் பொழியும் அழகிய இதழ் விரியும் செழுமையான
வெண்ணிற மலர்கள் பூத்தமையால், பரவும் வாசனை கோவில் முழுவதும்
நிறைந்தது.
'வெண்மலர் வெண்மையான
இலீலி மலர் என்க.
| 106 |
காம்பா வணிகாட்
டியகன் னிநலத்
தோம்பா வணியிவ் வனியோர்த் தபிரா
னாம்பா வணிநம் பியைநல் கிடவோர்
தேம்பா வணியாங் கொடி சேர்த் தனென்றார். |
| |
"காம்பா அணி
காட்டிய கன்னி நலத்து
ஓம்பா அணி இவ் அணி ஓர்ந்த பிரான்,
நாம்பா அணி நம்பியை நல்கிட, ஓர்
தேம்பா அணிஆம் கொடி சேர்த்தன்." என்றார்.
|
"மெலியாத அழகைத்
தன்னிடத்துக் கொண்டு நின்ற கன்னி மரியாளின்
நன்மைக்கு இவ்வுலக அழகெல்லாம் வேண்டாத அழகென்று உணர்ந்த
ஆண்டவன், கெடாத அழகு கொண்ட ஆண்களிற் சிறந்தவனாகிய
சூசையையே ஓர் அழகாகச் சேர்த்துக் கொடுக்கும் அறிகுறியாக, ஒரு வாடாத
மாலை போன்ற இம்மலர்க் கொடியை அவனுக்குத் தந்தான்" என்று
அனைவரும் கூறினர்.
சேர்த்தன் -
'சேர்த்தனன்' என்ற சொல், இடையே 'அன்' சாரியை
கெட்டு நின்றது.
| 107 |
செழுந்தூய்
துகிர்சே யடிபொன் னிறவாய்
விழுந்தூ வியவெண் சிறைவேய் புறவங்
கொழுந்தூ விகொடோங் கிவளன் றலைமே
லெழுந்தூ வியைநீட் டியிருந் ததுவே. |
|