| 109 |
துறவா
தறொடர்ந் துமணந் தொடரா
துறலா வதெனோ திருவென் னுளமா
யறவா லயமா யவணங் கினைநீ
பெறவா வியபெற் றியதே பெறுவாய். |
| |
"துறவு ஆதல் தொடர்ந்து
மணம் தொடராது
உறல் ஆவது எனோ? திரு என் உளம் ஆய்,
அற ஆலயம் ஆய அணங்கினை நீ
பெற, ஆவிய பெற்றி அதே பெறுவாய்." |
"துறவு பூணுதலைப்
பின்பற்றி, திருமணத்தைத் தொடராமல் உறுதி
கொண்டிருப்பது ஏனோ? எனது திருவுளம் அது ஆகவே, அறத்தின்
ஆலயமாகிய தெய்வப்பெண் போன்ற மரியாளை நீ மனைவியாகப் பெறவே,
நீ விரும்பிய முறையில் அத் துறவையே பெருவாய்."
| 110 |
என்றூ
டொலியா யிளவெண் புறவுந்
தன்றூ விபுடைத் துயர்தா வியகால்
வன்றூ யொளிவீழ்ந் துவளன் றலைமேல்
மின்றூ விநிலா முடிவேய்ந் ததுவே. |
| |
என்று ஊடு ஒலி
ஆய், இள வெண் புறவும்
தன் தூவி புடைத்து உயர் தாவிய கால்,
வன் தூய் ஒளி வீழ்ந்து, வளன் தலை மேல்
மின் தூவி, நிலா முடி வேய்ந்ததுவே. |
என்று இவ்வாறு
ஊடே ஆண்டவன் குரல் எழுந்ததுமன்றி, தலைமேல்
அமர்ந்திருந்த இளமை வாய்ந்த வெண் புறாவும் தன் இறகுகளை
அடித்துக்கொண்டு உயரத் தாவியபோது, திரண்ட தூய்மையான ஒளி
வானத்தினின்று பொழிந்து, சூசையின் தலைமேல் மின்னலைத் தூவி,
நிலாவைப் போன்ற ஒளி வட்டங் கொண்ட முடியாய் அழகு செய்து நின்றது. |