| கடவுள்
குரலும் தலைமேல் அமர்ந்திருந்த புறா மேலே தாவியதும்
நோக்க, புறா தூய ஆவியின் அடையாளமென்று கொள்ள இடமுண்டு.
ஒளிக்கு வன்மை
அதன் திரட்சியென்று கொள்க.
| 111 |
வேய்ந்தா
னொளிவேந் தெனவேய்ந் ததெலா
மாய்ந்தா னருளே யளியே யமுதே
தோய்ந்தான் கடறோய்ந் தெனவும் பரினும்
வாய்ந்தான் றெழுதான் மதுவா கையினான். |
| |
வேய்ந்தான்
ஒளி வேந்து என; வேய்ந்தது எலாம்
ஆய்ந்தான்; அருளே அளியே அமுதே
தோய்ந்தான் கடல் தோய்ந்து என; உம்பரினும்
வாய்ந்தான்; தொழுதான் மது வாகையினான். |
தேன் நிறைந்த
மலர்க்கொடியை உடையவனாகிய சூசை
ஒளிக்கெல்லாம் அரசனாகிய ஞாயிறு போல் தோன்றினான்; அதுவரை
நிகழ்ந்து தோன்றிய எல்லாவற்றையும் ஆராய்ந்தான்; கடலில்
தோய்ந்தாற்போல இறைவன் அருளிலும் கருணையிலும் இன்பத்திலும்
தோய்ந்தான்; வானவரைக் காட்டிலும் பெருமை வாய்ந்தவன் ஆனான்;
நன்றியாற் கனிந்து ஆண்டவனைத் தொழுதான்.
| 112 |
வண்ணாங்
கவினார் வயதீ ரெழுகொள்
தண்ணாங் கலைதேய்த் தொளிர்தாட் கொடியை
எண்ணாங் கொடுமோர் வயதே கிமணந்
தெண்ணாங் கொடியான் செயவான் விதியே. |
| |
வண் ஆம் கவின்
ஆர், வயது ஈர் எழு கொள்,
தண் ஆம் கலை தேய்த்து ஒளிர் தாள் கொடியை,
எண் நாங் கொடும் ஓர் வயது ஏகி மணம்
தெண் ஆம் கொடியான், செய வான் விதியே. |
|