| நல்ல
வடிவமான அழகு நிறைந்து, பதினான்கு வயது கொண்டு,
குளிர்ச்சி பொருந்திய பிறையை மிதித்துத் தேய்த்து ஒளிரும் கால்களை
உடைய மலர்க்கொடி போன்ற மரியாளை, தெளிந்த வெண்ணிறமான
பூங்கொடியை உடையவனாகிய சூசை, முப்பத்திரண்டோடும் ஒன்று சேர்ந்து
முப்பத்து மூன்று வயது சென்று மணம் செய்ய வேண்டுமென்பது
வானுலகம் அமைத்துத் தந்த விதி ஆயிற்று.
வண்ணம்,
தன்மை, தெண்மை என்பன ஈறு குறைந்து நின்றன.
பதினாறு கலைகள் நிரம்பியது முழு மதியாதலின், மூன்று கலை நிரம்பிய
இளம்பிறை கலை எனப்பட்டது ஆகுபெயர். 'நான்கு' ஓசைப் பொருட்டு
'நாங்கு' என நின்றது.
அருமணமாகிய
திருமணம்
- மா, கருவிளம்,
- மா, கருவிளம், - மா, கருவிளம், - விளம்
| 113 |
வடிய மலிமது
நுகர வளியின மலரை மருவன வழியெனா
நெடிய கொடியுட னுரிய வரநிலை நிகரி னிறையமை
வளனின்மேற்
படிய விழிவிழி படிய மனமன மினிதில் விழவிழு பரிவுடன்
முடிய வருமண முரிய துணையிவன் முறையின் மொழிகு
ரெவருமே. |
| |
வடிய மலி மது
நுகர அளி இனம் மலரை மருவு அன வழி எனா,
நெடிய கொடியுடன், உரிய வர நிலை நிகர் இல் நிறை அமை
வளனின்மேல்,
படிய விழி விழி, படிய மனம் மனம், இனிதின் விழ, விழு பரிவுடன்,
"முடிய வரு மணம் உரிய துணை இவன்!" முறையின் மொழிகுவர்
எவருமே. |
வடியுமளவிற்கு நிறைந்த தேனை அருந்த
வண்டுக் கூட்டம் மலரை
மொய்த்தது போன்றதொரு தன்மை என்று சொல்லும் படியாக, நெடிய
மலர்க்கொடியுடன், அதற்கு உரிய வரங்களின் தன்மையும் நிகரில்லாத
நிறைவோடு அமைந்துள்ள சூசையின் மேல், கண்களின் மேல் கண்கள்
படியவும், மனங்களின் மேல் மனங்கள் படியவும், எல்லாம் ஒன்று சேர்ந்து |