|
இனிதாக அவனையே நோக்கிச்
சென்று சேரவுமாக, அங்கிருந்த யாவருமே,
சிறந்த அன்போடு, "நிறைவு பெறவிருக்கும் இம்மணத்திற்கு உரிய மணமகன்
இவனே!" என்று ஒருவர்க்கொருவர் சொல்லிக் கொள்வர்.
'இவன்' என்பதற்குப்பின்
'என்ற' என்று இணைக்குஞ் சொல் ஒன்று
வருவித்து உரைக்கப்பட்டது.
| 114 |
அருப்பு விரைமலர்
தளிர்த்து நறுமது வவிழ்த்த வளனுடை
கொடியினைக்
கருப்பு விலினிடை தொடுத்த பசுமலர் கதிர்த்த பகழிகொ
லெனவவர்
நெருப்பு விடவது குளிர்ச்சி விடுமிது நிகர்த்த வினையல
தெனவிவர்
விருப்பு மலியன தவத்தினி லிணையற விதித்த விருதென
வெவருமே. |
| |
அருப்பு விரை
மலர் தளிர்த்து நறு மது அவிழ்த்த வளன் உடை
கொடியினை,
"கருப்பு விலின் கிடை தொடுத்த பசு மலர் கதிர்த்த பகழிகொல்?"
என அவர்,
"நெருப்பு விட அது, குளிர்ச்சி விடும் இது; நிகர்த்த வினைஅலது."
என இவர்,
"விருப்பு மலி அன தவத்தில் இணை அற விதித்த விருது."
என எவருமே. |
அரும்பாய் இருந்து வாசனையுள்ள மலர்களாகத்
தளிர்த்து நல்ல
தேனைப் பொழிந்த வளன் கையில் கொண்டிருந்த கொடியைப் பற்றி, அவர்
சிலர், "மன்மதன் தனது கரும்பு வில்லில் தொடுத்த பசுமையான மலராகிய
ஒளியைப் பொழிந்த அம்பு தானோ?" என்று வினவினர். இவர் சிலர், "அது
நெருப்பைப் பொழிய, இதுவோ குளிர்ச்சியைத் தரும்; எனவே, அதற்கு ஒத்த
செயல் இதற்கு இல்லை." என்று கூறினர், யாவரும், "விருப்பம் மிகுவதற்குக்
காரணமான அத்தகைய தவத்தை முன்னிட்டு ஆண்டவன் ஒப்பற்ற
தன்மையாய் இவனுக்கு விதித்துத் தந்த வெற்றிக்கொடி இது." என்றனர். |