|
'கூறினர்' என
ஒரு சொல் வருவித்து முடிக்கப்பட்டது. காய்ந்த
கோலில் புதுமையாகத் தோன்றிய மலர்களாதலின், 'தளிர்த்து' எனப்பட்டது.
| 115 |
அன்று நசையொடு
நின்ற வனைவரு மங்க ணமைவன காணலாற்
கன்று மனமெழ வின்ப மலிகடல் கன்றி முழுகிய வேலையே
றின்று குரவனு மன்று கொடியொடு நின்ற வளனினை வாவெனாச்
சென்று துணையடி துன்றி வளனவை சென்னி மிசைதொழு
தானரோ. |
| |
அன்று நசையொடு
நின்ற அனைவரும், அங்கண் அமைவன
காணலால்,
கன்று மனம் எழ, இன்பம் மலி கடல் கன்றி முழுகிய வேலையே,
நின்று குரவனும், அன்று கொடியொடு நின்ற வளனினை,
"வா." எனா,
சென்று துணை அடி துன்றி வளன் அவை சென்னி மிசை
தொழுதான் அரோ. |
அன்று மரியாளைப்
பெற ஆசையோடு நின்ற அனைவரும், அங்கு
நிகழ்வனவெல்லாம் கண்டமையால், முன் அவள் கிடையாமையால் நொந்து
போயிருந்த மனமும் எழுச்சி பெற, இன்பம் நிறைந்த கடலில் கனிந்து
மூழ்கியவேளையில், குருவாகிய சீமையோனும் அங்கு வந்து நின்று, அன்று
மலர்க்கொடியோடு நின்ற சூசையை "வா" என்று அழைக்க, சூசையும்
சென்று, குருவின் ஈரடிகளையும் அணுகி, அவற்றைத் தன் தலைமேற்
கொண்டு தொழுதான்.
'அரோ'
அசைநிலை.
|