பக்கம் எண் :

முதற் காண்டம்246

நாண நளினமும், நாண மதியமும், நாண அனையவும்,
                                    நாரியைக்
காண மனம் எழு ஞான ஒளியொடு காமம் அற, உறு
                                    காதலாய்,
கோண மரபு அறு ஞான குரு அடி கோதை என அணி
                                    கோதையும்,
யாணர் ஒளியொடு சாயு பிறை நுதல் ஈசன் அடி உற
                                    ஏற்றினாள்.

      தாமரையும் நாண, சந்திரனும் நாண, வேறு ஒப்புக்கூறப்படும் யாவுமே
நாண, பெண்ணாகிய தன்னை ஆடவர் காணுங்கால் தம் மனத்தில் எழும்
ஞான ஒளியால் காமவுணர்வு நீங்க உண்மை அன்பு கொண்ட, கோணல்
வழக்கங்கள் அற்ற ஞானகுருவாகிய சீமையோன் திருவடிகளை தன்
தலைக்கு மாலையாக அணிந்த, மாலை போன்ற மரியாள் புதிய ஒளியோடு
கவிழும் தன் பிறை போன்ற நெற்றி குருவின் திருவடிகளிற் பொருந்துமாறு
தொழுதாள்.

     ஏற்றுதல் = ஏத்துதல்; தொழுதல் என்று பொருள்படும், ஏத்துதல்
என்ற சொல்லை ஏற்றுதல் என்று ஆள்வது முனிவர் மரபு.

     ஆண்டவன் அடியாரை ஆண்டவனாகவே கொள்வது ஒரு தமிழ்
மரபு. அதன்படி குருவாகிய சீமையோனை 'ஈசன்' என்றார். சுவாமி எனக்
குருவை அழைப்பதும் இம் மரபு பற்றியதேயாம்.
 
                      117
வாய்ந்த வொளியிரு வான சுடரினை மானு மிருவரை
                                     வாழ்கெனச்
சாய்ந்த முனிவர னாசி மொழியொடு தாவி யுணைகுபு
                                     தாங்கினா
னாய்ந்த விறையவ னேவு விதிமுறை யாகி யிணையென
                                     வாசியால்
வேய்ந்த மணமினி மேவி முடிதரல் வேத முறையென
                                     வோதினான்.
 
வாய்ந்த ஒளி இரு வான சுடரினை மானும் இருவரை, "வாழ்க!"
                                        என,
சாய்ந்த முனிவரன், ஆசி மொழியொடு தாவி அணைபுகு
                                        தாங்கினான்:
"ஆய்ந்த இறையவன் ஏவு விதி முறை ஆகி, இணை என
                                        ஆசியால்
வேய்ந்த மணம் இனி மேவி முடி தரல் வேத முறை." என
                                        ஓதினான்.