|
122
|
நிறையு மொளியொடு
திருவு நயமொடு நிதியு நனியொடு
நெறிவழா
முறையு மகிழ்வொடு கலையு மறிவொடு முயலும் வலியொடு
முரணறாப்
பொறையு மளியொடு பொருளும் வரமொடு புகழு நலமொடு
புரையிலா
மறையு மருளொடு தவமு மறமொடு வளர வருமண மாயதே. |
| |
நிறையும், ஒளியொடு
திருவும், நயமொடு நிதியும், நனியொடு
நெறி வழா
முறையும், மகிழ்வொடு கலையும், அறிவொடு முயலும், வலியொடு
முரண் அறாப்
பொறையும், அளியொடு பொருளும், வரமொடு புகழும், நலமொடு
புரைஇலா
மறையும், அருளொடு தவமும் அறமொடு வளர, அரு மணம்
ஆயதே. |
ஆடவர் மகளிர்க்கெல்லாம்
பொதுவான கற்பும், புகழோடு சேர்ந்த
செல்வமும், தமக்கும் பிறர்க்கும் இன்பம் தரும் நிதியும், நன்மையோடு நெறி
தவறாத நீதி முறையும், மகிழ்வோடு கூடிய கல்வியும், அறிவோடு கூடிய
முயற்சியும், வலிமையோடு பொருந்தி மாறுபாட்டால் நீங்காத பொறுமையும்,
கருணையோடு கூடிய பொருளும், வரத்தோடு கூடிய புகழும், நலங்களோடு
பொருந்திக் குற்றமற்ற வேதவாழ்க்கையும், அருளோடு கூடிய தவமும்
எல்லாம் அறநெறியோடு வளரும் படியாக, இந்த அரிய திருமணம்
நிறைவெய்தியது.
|
123 |
ஓசை
யெழுபுக ழோத லெழுகட லோத மெழுமென வேதியார்
பூசை யெழுதுதி தூப மெழுபுகை போது மெழுவெறி
போழ்திலா
சூசை யெழுமொளி கோதை யெழுமொளி சோதி யிணையென
வேய்தலா
லாசை யெழுநய மாய வெழுதிரை யாழ வருமண மாயதே. |
|