பக்கம் எண் :

முதற் காண்டம்251

ஓசை எழு புகழ் ஓதல் எழு கடல் ஓதம் எழும் என,
                                  வேதியார்
பூசை எழு துதி தூபம் எழு புகை போதும் எழு வெறி
                                  போழ்து இல்ஆ,
சூசை எழும் ஒளி கோதை எழும் ஒளி சோதி இணை என
                                  வேய்தலால்,
ஆசை எழு நயம் ஆய எழு திரை ஆழ, அரு மணம்
                                  ஆயதே.

     மக்கள் ஓசை எழுமாறு இவ்விருவர் புகழையும் எடுத்துக் கூறுதல்
பொங்கி எழுந்த கடல் அலைபோல் எழுவதாலும், குருக்கள் செய்யும்
பூசைகளினின்று எழும் துதியொலியும் தூபக் கலசத்தினின்று எழும் புகையும்
சொரியும் மலர்களினின்று எழும் வாசனையும் அவற்றிற்கெனக் குறித்த நேரம்
இல்லாமல் நடைபெறுவதாலும், சூசையிடமிருந்து எழும் ஒளியும், மாலை
போன்ற மரியாளிடமிருந்து எழும் ஒளியும் ஞாயிறும் திங்களுமாகிய இணைச்
சுடர் போலத் தோன்றுவதனாலும், கண்டோரெல்லாம் ஆசையினால் எழும்
இன்பம் என்னும் பொங்கிய கடலில் ஆழ, அரிய திருமணம் நிறைவெய்தியது.
 
                      124
கன்னி முறையொடு நாய கனையோளி காலு முடுவென வீனுத
லென்னி னியமுறை சூடு மிவளென வேக பரனிடு மேவலாற்
றுன்னி யிவடுணை யாக மணமமை போதி லிவனுள தூயகற்
புன்னி மருவிய வான முளர்துதி யோத வருமண மாயதே.
 
"கன்னி முறையொடு நாயகனை ஒளி காலும் உடு என ஈனுதல்
என் இனிய முறை சூடும் இவள்." என ஏகபரன் இடும் ஏவலால்
துன்னி, இவள் துணை ஆக மணம் அமை போதில் இவன் உள
                                              தூய கற்பு
உன்னி மருவிய வானம் உளர் துதி ஓத, அரு மணம் ஆயதே.

       ஒருவனாகிய கடவுள், "இவள் எனது இனிய வரத்தின் முறையால்
ஒளியை உமிழும் விண்மீன் போல ஆண்டவனைத் தன் கன்னித் தன்மை
குன்றாத முறையோடு பெற்றெடுக்கும் பெருமையை முடியாகச் சூடுவாள்