|
என்று இட்ட கட்டளைப்படி
அங்கு வந்து திரண்ட வானுலகத்தவராகிய
வானவர்கள் இவளுக்குத் துணையாகத் திருமணத்திற்கு அமைந்த போது இச்
சூசையிடம் பொருந்தியுள்ள தூய கற்பை எண்ணித் துதிகளைக் கூற, அரிய
திருமணம் நிறைவெய்தியது.
| 125
|
பாட
மட வரர் பாட விறலியர் பாகு நனிசெவி மேயலா
னாட நயநல நாடு மளவுட னாகி நகரொடு நாடெழாக்
கூட வொளிவிரி வான வுலகினர் கூரு களியிசை கூறியின்
பாட விருவுல காக வளவற வாழ வருமண மாயதே. |
| |
பாட மடவரர்,
பாட விறலியர், பாகு நனி செவி மேயலால்
நாட, நய நலம் நாடும் அளவுடன் ஆகி நகரொடு நாடு எழா,
கூட ஒளி விரி வான உலகினர் கூரு களி இசை கூறி இன்பு
ஆட, இரு உலகு ஆக அளவு அற வாழ, அரு மணம்
ஆயதே. |
மகளிர் பாடவும்,
ஆடல் மகளிர் ஆடிப்பாடவும், அப்பாட்டொலியை
வெல்லப் பாகு போல் நன்கு செவிகள் அருந்துவதனால் மேலும் கேட்க
நாடவும், அவ்வாறு நாடும் அளவுக்குத் தக்கபடி அவரவர்க்கு இன்ப நலம்
உண்டாகி எருசலேம் நகரத்தோடு சூதேய நாடு முழுவதுமே எழுச்சி
பெறவும், அதனோடு கூட ஒளி விரியும் வானுலகத்தவராகிய வானவர்கள்
மிக்க களிப்போடு இசை பாடி இன்பக் கூத்தாடவும், இவ்வாறு இரண்டு
உலகங்களும் ஒன்றாக அளவற்ற நல் வாழ்வு பெறுமாறு, அரிய திருமணம்
நிறை வெய்தியது.
'நாடு எழ' என்றது,
திருமணத்தை முன்னிட்டு வெளியூர்களிலிருந்து
வந்திருந்த தாவிதன் மரபினரையும், வழிபாடு கருதி வந்திருந்தோரையும்
கருதியதாகக் கொள்க.
| 126 |
ஓய வினையினி
யோவ லிலநில மோகை யெழுகட லூடுலாய்
மாய விருடவிர் வான நிலையினர் வாழி யெனவென வாசமார்
தூய மலர்மழை தூவி யிசைமழை தூவி யொளிமழை தூவலா
லாய விருவுல காக வளவற வாழ வருமண மாயதே. |
|