ஓய வினை இனி,
ஓவல் இல நிலம் ஓகை எழு கடல் ஊடு
உலாய்,
மாய இருள் தவிர் வான நிலையினர், "வாழி!" என என,
வாசம் ஆர்
தூய மலர் மழை தூவி, இசை மழை தூவி ஒளி மழை
தூவலால்,
ஆய இரு உலகு ஆக அளவு அற வாழ, அரு மணம்
ஆயதே. |
இனிமேல் தீய
செயல்களெல்லாம் ஓயவும், வருத்தம் இல்லாது
இவ்வுலகம் பொங்கும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கவும், மாய இருள் நீங்கிய
வானுலகத்தவராகிய வானவர்கள், 'வாழ்க!' என்றென்று, வாசனை நிறைந்த
தூயமலர் மாரி பொழிந்து, இசைமாரி பொழிந்து, ஒளி மாரியும் பொழிதலால்,
உள்ள இரண்டு உலகங்களும் ஒன்றாக அளவற்ற நல்வாழ்வு பெறுமாறு,
அரிய திருமணம் நிறைவெய்தியது.
| 127
|
ஒல்லை
யுளியவை யுள்ளு முறைசெயு முண்மை யுளபர னாசிதந்
தெல்லை யிலநய முள்ளு மமரரு மெண்ணி யறைவன வாசியோ
டல்லை யறுநெறி யுள்ள முனிமுத லன்ன வருமிடு மாசியால்
வல்லை இருவுல காக வளவற வாழ வருமண மாயதே. |
| |
ஒல்லை உளியவை
உள்ளும் முறை செயும் உண்மை உள பரன்
ஆசி தந்து,
எல்லை இல நயம் உள்ளும் அமரரும் எண்ணி அறைவன ஆசியோடு,
அல்லை அறும் நெறி உள்ள முனி முதல் அன்னவரும் இடும்
ஆசியால்,
வல்லை இரு உலகு ஆக அளவு அற வாழ, அரு மணம் ஆயதே |
நினைத்தவற்றை
அம்முறைப்படியே விரைவில் செய்யக்கூடிய
உண்மையான ஆண்டவன் ஆசி தந்தும், மானிடர்க்கு எல்லையில்லாத
இன்பமே கருதும் வானவரும் எண்ணிக் கூறும் ஆசியோடு, இருளை
அறுக்கும் அறநெறி கொண்ட முனிவனாகிய சீமையோன் முதல் அவனைப்
போன்ற பிற குருக்களும் வழங்கும் ஆசியும் சேர்ந்து, வலிமையோடு
இரண்டு உலகங்களும் ஒன்றாக அளவற்ற நல்வாழ்வு பெறுமாறு, அந்த
அரிய திருமணம் நிறைவெய்தியது. |