பக்கம் எண் :

முதற் காண்டம்255

அளிப் படவந்த ஏவல் உணர் அளிப் பட விண்ட வாகை
                                   வளன்,
ஒளிப் பட மன்றல் ஆய வரம் உவப்பில் இணங்கல் ஆகும்
                                   முறை
வெளிப் பட அன்று வேணும் என, விழுப் படை அன்பு
                                   உலாவி உறு
களிப் பட நின்ற ஈசன் அடி கருத்தில் அணிந்து தாழுவனே

     கருணை புலப்பட வந்த சீமையோனின் கட்டளையை உணர்ந்து
கொண்ட, வண்டுகள் மொய்க்க மலர்ந்த மலர்க் கொடியை உடையவனாகிய
வளன், ஒளியோடு பொருந்தித் தனக்குத் திருமணமாய்க் கிடைத்த
வரத்திற்கு மகிழ்ச்சியோடு இணங்க நடக்கும் முறை அன்று தனக்கு
வெளிப்படுத்தப்பட வேண்டுமென்று கேட்டு, சிறப்புக் கொண்ட அன்பு
மேலே உலாவ விட்டு உள்ளத்திலும் பெருமகிழ்ச்சி கொண்டு நின்ற
குருவின் பாதத்தைத் தன் கருத்தில் இருத்தி வணங்குவான்.

     ஆண்டவன் அடியாரை ஆண்டவனாகவே கொள்வது ஒரு தமிழ்
மரபு. அதன் படி, குருவாகிய சீமையோனை 'ஈசன்' என்றார். 'சுவாமி'
எனக் குருவை அழைப்பதும் இம்மரபு பற்றியதேயாம்.
 
                     130
உடுத்தவ னந்த ஞானமுறை யுரைத்துமிழ் கின்ற ஞானமுனி
கொடுத்தவ ரங்க ளாலுயரு குணத்துவ ணங்கு மாவரனை
யெடுத்தபி னுண்ட வோகையெழ வெடுத்தமு திர்ந்த வேதமுறை
யடுத்தவ னந்த நீதிபல வவிழ்த்தன பின்பு கூறுவனால்.
 
உடுத்த அனந்த ஞான முறை உரைத்து உமிழ்கின்ற ஞானமுனி,
கொடுத்த வரங்களால் உயரு குணத்து வணங்கும் மாவானை
எடுத்த பின், உண்ட ஓகை எழ, எடுத்த முதிர்ந்த வேத முறை
அடுத்த அனந்த நீதிபல அவிழ்த்தன பின்பு, கூறுவன் ஆல்:

       தான் ஆடையாக உடுத்த முடிவில்லாத தெய்வ ஞான
முறைகளையெல்லாம் பிறர்க்குச் சொல்லிப் பொழியும் இயல்புள்ள ஞான
முனிவனாகிய சீமையோன், கடவுள் கொடுத்த வரங்களால் உயர்ந்த