பக்கம் எண் :

முதற் காண்டம்256

குணத்தின் அளவாகப் பணியும் பெருவரத்தோனாகிய சூசையைத் தூக்கி
யெடுத்த பின், தான் கொண்ட மகிழ்ச்சியால் எழுச்சி பெற்று, பிற
யாவற்றினும் எடுப்பாயுள்ள பழமையான வேதத்தின் ஒழுங்குகளையும்
அதற்கடுத்த முடிவில்லாத நீதிகள் பலவற்றையும் விரித்துரைத்த பின்பு,
இவ்வாறும் கூறுவான்.

     "பணியுமாம் என்றும் பெருமை, சிறுமை, அணியுமாம் தன்னை
வியந்து" என்ற குறளுக்கு (978) ஏற்ப, வளனும் பெற்ற வரங்களால்
உயர்ந்த அளவிற்கு வணக்கம் பூண்டு ஒழுகினான். 'ஆல்' அசைநிலை.
 
                      131
இருத்தி யகன்ற கேணியற லிறைத்தள வுந்தி யூறுமெனப்
பொருந்திய மைந்த தேவவருள் புணர்த்தவ றங்கொ டேறுமது
கருத்திலொ ளிந்த போதுபசுங் கலத்திலொ ளிந்த நீரதறிந்
தருத்தியெ ழும்ப வாழியென வணைத்துவி ரும்பி யேவினனால்.
 
"இருத்தி அகன்ற கேணி அறல் இறைத்த அளவு உந்தி ஊறும் என,
பொருத்தி அமைந்த தேவ அருள் புணர்த்த அறம் கொடு ஏறும்;
                                                அது
கருத்தில் ஒளிந்த போது, பசுங் கலத்தில் ஒளிந்த நீர்: அது அறிந்து,
அருத்தி எழும்ப வாழி." என அணைத்து விரும்பி ஏவினன் ஆல்.

     "ஆழமாய்த் தோண்டி அகலமாயுள்ள கிணற்று நீர் இறைத்த அளவிற்கு
எழும்பி ஊறுவது போல், ஒருவனிடம் பொருந்தி அமைந்துள்ள தெய்வ
அருள் தான் செய்த அறத்தை அளவாகக் கொண்டு மேலும் ஏறும்; அது
கருத்தளவில் நின்று செயல்படாது ஒளிந்து கொள்ளும் போது, பச்சை மண்
கலத்தில் ஒளிந்து கெடும் நீருக்கு நிகராகும்; அதனை நீ அறிந்து, பிறர்பால்
அன்பு பொங்கி எழுமாறு வாழ்வாயாக" என்று அவனை விருப்பத்தோடு
அணைத்து ஏவினான்.

     'அணைத்து ஏவினான்' என்பதனை 'ஏவி அணைத்துக் கொண்டான்'
என மாறுக. பச்சை மண் கலத்து நீர் கலத்தையும் அழித்துத் தானும்
வீணாவது போல் பெற்ற வரத்தைப் பிறர்க்குப் பயன்படப் பகிர்ந்து