கொள்ளாத போது தனக்கும்
பிறர்க்கும் பயனின்றி வரமும் பாழாகு மென்பது
கருத்து. வளன் தன் வரங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் காப்பியம் முழுவதும்
பரந்து கிடத்தலோடு, 'வேதக் கெழுமைப் படலம்' போன்றவற்றில் விரிந்து
கிடக்கவும் காணலாம். 'ஆல்' அசை நிலை.
'பசுங்கலத்தில்
ஒளிந்த நீர்' என்ற உவமை "கலத்தாற் பொருள்
செய்தே மார்த்தல் பசுமட் கலத்துணீர் பெய்திரீஇ யற்று" என்ற குறளில்
(660) காணப்படுகிறது.
132
|
இடித்துமு
ழங்கு மேறனைய விவற்றை யறிந்த கோதையுளம்
வெடித்துவ ருந்தி மாறுமில விதிக்குரு மன்னு பாதமில
நெடித்துவ திந்த கோயிலில் நெறித்துணை நின்ற மாதரில
பிடித்துந டந்த வீதியில பெயர்க்குவ னென்று வாடினளே. |
|
இடித்து முழங்கும்
ஏறு அனைய இவற்றை அறிந்த கோதை,
உளம்
வெடித்து வருந்தி, மாறும் இல, "விதிக் குரு மன்னு பாதம் இல,
நெடித்து வதிந்த கோயில் இல, நெறித் துணை நின்ற மாதர் இல,
பிடித்து நடந்த வீதி இல பெயர்க்குவன்." என்று வாடினாளே |
தனக்கு
இடித்து முழங்கும் கோடையிடி போன்ற இவற்றையெல்லாம்
அறிந்த மாலை போன்ற மரியாள், மனம் வெடித்தாற் போல் வருந்தி,
அவ்வருத்தம் மாற வழியே இல்லாமையால், "வேத விதிகளைக் கற்பிக்கும்
குருவின் நிலைபெற்ற திரு அடித் துணையும் இல்லாமல், நெடுங்காலம்
தங்கியிருந்த இக்கோவிலும் இல்லாமல், வேத நெறிக்குத் துணையாக நின்ற
இக் கன்னிப் பெண்களின் துணையும் இல்லாமல், தேவைக்கு ஏற்ப மட்டும்
நடந்த இந்தத் தெருவும் இல்லாமல் நீங்கிச் செல்லவேண்டியவள்
ஆயினேன்" என்று கூறி வாட்டங் கொண்டாள்.
'கோயில்'
என்றாரேனும், 'கோயிலைச் சார்ந்த மடம்' என்று கொள்க.
'பெயர்குவன்' என்பது 'ஓசைக்காக, 'பெயர்க்குவன்' என நின்றது. |