133
|
உடைத்தன
நின்று பேருமென உயிர்த்தன மைந்தர் பேருமெனக்
குடைத்தழல் புண்டு ழாவலெனக் குறைத்துட லொன்று
பேருமெனப்
பெடைத்தண ரன்றில் வாடுமெனப் பெயர்த்துயிர் நின்ற
தேகமென
வடைத்தவ ரந்தை காலுமென வரற்றிவ ருந்தி வாடினளே |
|
உடைத் தனம்
நின்று பேரும் என, உயிர்த்தன மைந்தர் பேரும் என,
குடைத்து அழல் புண் துழாவல் என, குறைத்து உடல் ஒன்று
பேரும் என,
பெடைத் தணர் அன்றில் வாடும் என, பெயர்த்து உயிர் நின்ற
தேகம் என,
அடைத்த அரந்தை காலும் என அரற்றி வருந்தி வாடினளே. |
தான்
கொண்டிருந்த செல்வம் தன்னைவிட்டு நீங்குவது போலவும்,
பெற்ற பிள்ளைகள் தாயை விட்டுப் பெயர்வது போலவும், புண்ணைக்
குடைந்து நெருப்புத் துழாவது போலவும், உடலில் ஒர் உறுப்பு தறிக்கப்
பட்டு நீங்குவது போலவும், தன் பெட்டையைப் பிரிந்த ஆண் அன்றில்
வாடுவது போலவும், உயிர் பிரிந்து கிடந்த உடல்போலவும் தன் நெஞ்சை
அடைந்த துன்பத்தைக் கக்குவதுபோல் மரியாள் வாய்விட்டுப் புலம்பி
வருந்தி வாடினாள்.
உயிர்த்தன -
உயிர்த்த: 'அன்' இடையே சாரியை. குடைத்து -
குடைந்து; பெயர்த்து - பெயர்ந்து; வலித்தல் விகாரங்கள்.
134
|
இருத்திய
தந்தை தேவவள மெனத்தெரு ளுண்டு தேறியுயர்
கருத்தில ணிந்த மாணமுனி கழற்கள்ப ணிந்து காதலெழப்
பொருத்திய வன்பி னோகையொடு புடைத்துணை நின்ற
பேதையரை
யருத்திக லந்த நீரிரிய வரற்றிய ணைந்து தாழுவளே. |
|