இருத்திய தந்தை
தேவ உளம் எனத் தெருள் உண்டு தேறி,
உயர்
கருத்தில் அணிந்த மாண முனி கழற்கள் பணிந்து, காதல்
எழப்
பொருத்திய அன்பின் ஓகையொடு புடைத் துணை நின்ற
பேதையரை
அருத்தி கலந்த நீர் இரிய அரற்றி அணைந்து தாழுவளே. |
இதுவரையில் தன்னை
அங்கு இருத்தி வைத்த தந்தையாகிய கடவுளின்
திருவுளம் இதுவென்று தெளிந்து தேறி, உயர்ந்த கருத்தோடு தன் தலையில்
அணிந்து போற்றிய மாண்புள்ள முனிவனாகிய சீமையோன் கால்களில்
விழுந்து பணிந்து, ஆசை மேலோங்கப் பொருந்திய அன்பின் மகிழ்ச்சியோடு
தன் பக்கம் எப்பொழுதும் துணையாக நின்ற கன்னிப் பெண்களை அன்பு
கலந்த கண்ணீர் வடியப் புலம்பியவண்ணமாய் நெருங்கி வணங்குவாள்.
135
|
கனத்திலெ
ழுந்த வோதையொடு கனத்தலெழுந்த கூரலினர்
வனத்திலெ ழுந்த தீயனைய மனத்திலெ ழுந்த பீடை யுறீஇ
யினத்திலெ ழுந்த வார்வமிக வியத்திலெ ழுந்த தேறலொடு
நனத்திலெ ழுந்த கோயிலது தலத்திலெ ழுந்து போயினரே. |
|
கனத்தில் எழுந்த
ஓதையொடு கனத்தில் எழுந்த கூரலினர்,
வனத்தில் எழுந்த தீஅனைய மனத்தில் எழுந்த பீடை உறீஇ,
இனத்தில் எழுந்த ஆர்வம் மிக, இயத்தில் எழுந்த தேறலொடு,
தனத்தில் எழுந்த கோயில் அது தலத்தில் எழுந்து போயினரே. |
கருமேகம்போல்
தோன்றிய கூந்தலை உடைய அம்மகளிர்
கருமேகத்தில் எழுந்த முழக்கம்போன்ற அழுகுரலோடு, காட்டில் எழுந்த
நெருப்பைப்போல மனத்தில் பெருந் துன்பம் முதலில் அடைந்தபோதிலும்,
பின் இனவுணர்வு காரணமாக எழுந்த ஆர்வம் மிகக்கொண்டு, இசைக்
கருவிகளின் ஓசைபோல் சிறந்த தேற்றுரைகளைக் கூறவே, சூசையும்
மரியாளும் பொன்னால் எழுப்பிய கோவில் தலத்திற்கு எழுந்து சென்றனர்.
|