"கனத்தில் இழிந்து
சாய, வரைக் கரத்தில் விழுந்து பேர
வரும்
வனத்தில் வளர்ந்து போக, வயல் வயத்தில் மெலிந்து பாய,
அலை
இனத்தில் இரிந்து, பேரும் இல இளிப் பட வந்த வாரி என,
தனத்தில் இருந்த வாழ்வு இனிமை தவிர்க்கல் நிறைந்த
ஞானம் அதே." |
"மேகத்தினின்று
மழையாய் இறங்கிச் சரிந்து, மலையின் கையில்
விழுந்து அருவியாகப் பெயர்ந்து, கடந்து வரும் காட்டில் ஆறாக வளர்ந்து
போய், வயற் பகுதியில் வாய்க்காலாக மெலிந்து பாய்ந்து, இறுதியில்
அலைகளின் இனத்தோடு நீங்கி, தன் பேரும் இல்லாமல் இழிவு பட வந்த
வெள்ளம் போன்று, நிலையில்லாத செல்வத்திலிருந்து கிடைக்கும்
வாழ்க்கையின் இனிமையை விலக்குதலாகிய அதுவே நிறைந்த ஞானமாகும்.
'கல்லிடைப்
பிறந்து போந்து கடலிடைக் கலந்த நீத்தம்' என்று
கம்பர் (பாலகாண். ஆற்றுப்படலம் 19) என்று குறிப்பிடும் வெள்ளத்தின்
போக்கை முனிவர் நிலையில்லாச் செல்வத்திற்கு ஒப்பிடல் கருதத்தக்கது.
138
|
அறத்துணை
யன்றி யாயதுணை யதற்றம றிந்து றாமை யெனத்
திறத்துணை நம்பு வீரர்பிறர் திறத்தில்மெ லிந்து மாள்வரென
மறத்துணை தந்த தீதுதரு மடத்திழி வென்று தேவவரு
ளுறத்துணை தந்த பாதமது வுயிர்க்கொர னந்த வீடெனவே |
|
"அறத் துணை அன்றி,
ஆய துணை அது அற்றம் அரிந்து
உறாமை என,
திறத் துணை நம்பு வீரர் பிறர் திறத்தில் மெலிந்து மாள்வர் என,
மறத் துணை தந்த தீது தரும் மடத்து இழிவு என்று, தேவ
அருள் உற,
துணை தந்த பாதம் அது உயிர்க்கு ஓர் அனந்த வீடு எனவே." |
|