"அறத்தால்
ஆகிய துணை ஒன்றேயன்றி, மற்ற வகையால் ஆகிய
துணை என்னும் அது சமயம் அறிந்து உதவியாய் அமையாத தன்மையது
எனவும், தமது திறத்தைக் காட்டத் துணையை நம்பிக்கொண்டிருக்கும் வீரர்
பிறர்தம் தனிப்பட்ட திறத்தின் முன் மெலிந்து மாள்வர் எனவும், இவைபோலவே, பாவத்தைத்
துணையாகக்கொண்டு சேர்த்துக்கெண்ட தீமை
அறியாமையும் இழிவுமே தருமென்று அறிந்து, தெய்வ அருள் ஒன்றையே
நாடுவதனால், அவ்வாண்டவன் துணையாகத் தந்த திருவடியாகிய அதுவே
உயிருக்கு ஒரு முடிவில்லாத மோட்ச வீடுபோல் ஆகும்."
மடத்து - மடத்தொடு
என்ற சொல் வேற்றுமை உருபு குறைந்து
நின்றது.
139
|
இவற்றையி
யம்பி மீளமறை யியற்படு மண்டு நீதிபல
தவத்தைய ணிந்த தேவமுனி தரத்தயை தந்த வாசிதர
வவற்றையு ணர்ந்த போதிருவ ரகத்திலு யர்ந்து பாதமல
ருவத்தையு வந்து தாழுவே ருகத்திலு திர்ந்த மீனனையார். |
|
இவற்றை இயம்பி,
மீள மறை இயல் படு மண்டு நீதி பல.
தவத்தை அணிந்த தேவமுனி, தரத் தயை தந்த ஆசி தர,
அவற்றை உணர்ந்த போது, இருவர், அகத்தில் உயர்ந்து, பாத
மலர்
உவத்தை உவந்து தாழுகுவர், உகத்தில் உதிர்ந்த மீன்
அனையார். |
தவத்தை அணிந்துள்ள
தெய்வ முனிவனாகிய சீமையோன்
இவற்றையெல்லாம் சொல்லி, மீண்டும் வேத இயல்போடு பொருந்திய திரண்ட
நீதிகள் பலவற்றையும் சொல்லித் தந்து அன்பு கலந்த தன் நல்லாசியையும்
வழங்க, உலக முடிவில் வானினின்று உதிர்ந்த விண்மீன் போன்ற
அவ்விருவரும் தம் உள்ளத்தில் எழுச்சிகொண்டு, அம்முனிவனின் இரண்டு
அடிகளாகிய தாமரை மலர்களை மகிழ்ச்சியோடு பணிவர்.
'பாத
மலர் உவத்தை' என்பதனை, 'உவ பாத மலரை' என மாற்றுக.
'உவயம்' என்ற சொல் இடைக்குறையாய் 'உவம்' என நின்றது. |